முகநூல் மூலம் காதல்.. கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்... ஏமாற்றியதால் பெண் கண்ணீர் புகார்

முகநூல் மூலம் காதல்.. கர்ப்பமாக்கிய போலீஸ்காரர்... ஏமாற்றியதால் பெண் கண்ணீர் புகார்

முகநூல் மூலம் பழக்கம் ஏற்பட்டு கணவன், மனைவியாக வாழ்ந்து கர்ப்பமாக்கிவிட்டு திருமணம் செய்ய மறுத்த காவலர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பெண் ஒருவர் தாம்பரம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கண்ணீர் மல்க புகார் அளித்துள்ளார்.

சென்னை தாம்பரத்தையடுத்த ஊரப்பாக்கம் காரணை புதுச்சேரியைச் சேர்ந்த ஷோபனா (27) என்பவருக்கு திருமணமாகி 6 வயதில் மகள் இருக்கிறார். கணவரை இழந்த இவர் தனிமையில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், முகநூல் வாயிலாக விக்னேஷ்வர் என்பவருடன் ஷோபனாவுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது, புழல் காவல் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக தான் பணிபுரிந்து வருவதாக விக்னேஷ்வர் கூறியுள்ளார். நட்பாகப் பழகிய இருவரும் பின்னர் காதலர்களாக வலம் வந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இருவரும் உறவு வைத்துக்கொண்டுள்ளனர். இதனால் ஷோபனா கர்ப்பமாகியுள்ளார். இந்த தகவலை விக்னேஷ்வரிடம் கூறியுள்ளார் ஷோபனா. அதிர்ச்சியடைந்த காவலர், கட்டாயப்படுத்தி கருக்கலைப்பு செய்ய வைத்துள்ளார். பின்னர் திருமணம் செய்து கொள்ளாமல் ஷோபனாவுக்கு டிமிக்கிக் கொடுத்துள்ளார். ஒரு கட்டத்தில், திருமணம் செய்துகொள்ளாவிட்டால் தற்கொலை செய்துக்கொள்வேன் என ஷோபனா மிரட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த விக்னேஷ்வர், ஷோபனா கழுத்தில் தாலிகட்டியுள்ளார்.

திருமண வாழ்க்கை ஒரு சில மாதங்களே கடந்த நிலையில், உன்னுடன் இனி வாழ மாட்டேன் என்று கூறி ஷோபனாவுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளார் விக்னேஷ்வர். இதையடுத்து, வெகுண்டெழுந்த ஷோபனா, செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். காவல்துறையினர் விக்னேஷ்வரை அழைத்து பேசியபோது, ஷோபனாவுடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை என கூறியுள்ளார்.

இதையடுத்து, சென்னை காவல் ஆனையர் அலுவலகத்தில் ஷோபனா புகார் அளித்துள்ளார். அந்த புகார் மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. ஆனால் காவல்துறையினர் அந்த புகாரை கண்டுகொள்ளவில்லை. இதனிடையே, விக்னேஷ்வர் ஆபாசமாக பேசியதைத் தொடர்ந்து மாதர் சங்கங்களிடம் ஷோபனா புகார் அளித்துள்ளார். அவர்களையும் விக்னேஷ்வர், ஆபாசமாக பேசியுள்ளார். இந்நிலையில், தாம்பரம் காவல் ஆனணையர் அலுவலகத்தில் ஷோபனா புகார் அளித்துள்ளார். அந்த புகார் தாம்பரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அனுப்பப்பட்டது. ஆனால், காவல்துறையினர் தனது புகார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று ஷோபனா கூறியுள்ளார்.

அண்மையில் தாம்பரம் சரகத்துக்கு உட்பட்ட பெண் ஒருவர் காவல்நிலையத்துக்கு புகார் அளிக்க சென்றார். அப்போது, அந்த பெண்ணை காவல்துறையினர் அலைகழித்துள்ளனர். கடைசியில் தாம்பரம் காவல்துறை ஆணையர் ரவியிடம் புகார் அளித்துள்ளார் அந்த பெண். இதையடுத்து, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் அனைத்து காவலர்களையும் வாக்கி டாக்கியில் தொடர்பு கொண்ட காவல்துறை ஆணையர் ரவி, அனைவரையும் தனுஷ்கோடிக்கு டிரான்ஸ்பர் பண்ணிவிடுவேன். அங்கு கடலில் சிப்பிதான் எடுக்கணும் என்று கடுமையாக எச்சரித்திருந்தார். தற்போது மீண்டும் ஒரு சம்பவம் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in