ஜெயிலுக்கு எல்லாம் போக முடியாது... நீதிமன்றத்தில் கத்தியைக் காட்டி தப்பியோடிய கைதி… கோவையில் பரபரப்பு!

நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி
நீதிமன்றத்தில் இருந்து தப்பியோடிய கைதி

கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு வழக்கு விசாரணைக்கு வந்த பஷீர் என்ற நபரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது, ’ஜெயிலுக்கு எல்லாம் போக முடியாது’ என்று கூறிய படியே கத்தியை காட்டி மிரட்டி தப்பியோட முயன்ற சம்பவத்தால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பஷீர். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி விவகாரத்தான நிலையில் தற்போது பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகின்றார். இந்நிலையில் இவர் மீது கடந்த 2021 ஆம் ஆண்டு காஞ்சனா என்பவர் கொடுத்த புகாரின் பேரில், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையில் ஆஜராக பல முறை நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில் அவர் ஆஜராகாமல் இருந்தார். இதனையடுத்து பஷீருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்திருந்தது.

இதனையடுத்து, நேற்று பஷீர் தனது மனைவி பிரியாவுடன் நீதிமன்றத்திற்கு வந்தார். அப்போது நீதிமன்றத்தில் அவரை கைது செய்ய போலீசார் தயாராக இருந்ததால், ஆவேசமடைந்த பஷீர் சிறைக்கு போகமாட்டேன் என கூறி ரகளையில் ஈடுபட்டார். மேலும், மனைவி பிரியாவின் கைப்பையில் இருந்த சிறிய கத்தியை தூக்கிக் கொண்டு ரகளையில் ஈடுபட்டார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட அவர், கண்ணிமைக்கும் நேரத்தில் நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடினார். சுதாரித்த போலீஸார் அவரை விரட்டி பிடித்து நீதிமன்றம் அழைத்து வந்து நீதிபதி முன் ஆஜபர்படுத்தினர். இதனையடுத்து, செல்வபுரம் காவல் நிலையத்திற்கு பஷீரை அழைத்து சென்று விசாரணை நடத்தினர். நீதிமன்ற வளாகத்தில் கத்தியுடன் பஷீர் ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in