
சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே மனைவியைக் கத்தியால் குத்தியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இளையான்குடி அருகேயுள்ள பூச்சியேந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலுச்சாமி (55). இவரது மனைவி காந்தி. கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தன்னுடன் சேர்ந்து வாழ வருமாறு மனைவியை அடிக்கடி வேலுச்சாமி அழைத்துள்ளார். அதற்கு அவரது மனைவி காந்தி மறுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த 5 -ம் தேதி பாலுச்சாமி மதுபோதையில் பூச்சியேந்தல் கிராமத்தில் காந்தி வசித்து வந்த வீட்டுக்கு வந்துள்ளார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அதில் ஆத்திரமடைந்த பாலுச்சாமி காந்தியை கத்தியால் குத்தினாராம். இதில் காயமடைந்த காந்தி அளித்த புகாரின்பேரில் இளையான்குடி போலீஸார் விசாரித்து வந்தனர்.
இந்தப் புகார் மீது மேல் நடவடிக்கை வேண்டாம் என போலீஸாரிடம் காந்தியின் மகன் சாய் கூறினாராம். இந்த நிலையில், பூச்சியேந்தல் கண்மாய்ப் பகுதியில் பாலுச்சாமி சந்தேத்துக்கிடமான முறையில் இறந்து கிடந்தார். அவரது உடல் அழுகிய நிலையில் காணப்பட்டது. தகவலறிந்த இளையான்குடி போலீஸார் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மனைவியை கத்தியால் குத்தியவர் மர்மமான முறையில் இறந்து கிடந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியும் ஏற்படுத்தி உள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
கேபி சுந்தராம்பாள் பிறந்தநாள் பகிர்வு! கதையைத் தேர்ந்தெடுத்த ரியல் ஹீரோயின்!
ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம்… பலி எண்ணிக்கை 4 ஆயிரமாக உயர்வு!
மகனுக்கா... மருமகளுக்கா? சிவகங்கை தொகுதிக்கு மோதும் திமுக அமைச்சர்கள்!
காவிரி விவகாரத்தால் இன்று போராட்டம்; முடங்கியது டெல்டா மாவட்டங்கள்!
“லியோ பட ஷூட்டிங்... நடன கலைஞர்கள் சொல்றது பொய்” பெஃப்சி ஆர்.கே. செல்வமணி விளக்கம்!