தாய் மற்றும் மகளை கொலை செய்துவிட்டு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த நபருக்கு ஆந்திர நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்து அதிரடியாக தீர்ப்பளித்துள்ளது.
சித்தூர் மாவட்டம், தம்பளப்பள்ளி பகுதியைச் சேர்ந்த ஷேக் மவுலாலி என்பவருக்கும், கணவரை இழந்த சரளா (39) என்ற பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டது. சரளா தன்னுடைய தாய் மற்றும் மூன்று குழந்தைகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார்.
இதையடுத்து மௌலாலி, சரளா அவருடைய குழந்தைகள் ஆகியோரை ஒரு வீட்டில் தங்க வைத்து தொடர்பை தொடர்ந்து வந்தார். இந்த நிலையில் திடீரென்று மௌலாலிக்கு சரளாவின் நடவடிக்கைகள் மீது சந்தேகம் ஏற்பட்டது.
இது தொடர்பாக இரண்டு பேருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் 2021-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் சரளாவை அடித்து கொலை செய்த மௌலாலி உடலை அருகில் உள்ள ஏரியில் வீசினார். அதைத் தொடர்ந்து சரளாவில் தாயையும் கொலை செய்தார்.
மூன்று குழந்தைகளை கர்நாடகவுக்கு அழைத்துச் சென்ற அங்கு தங்க வைத்திருந்தார். அப்போது சரளாவின் பெண் குழந்தையை பாலியல் வன்கொடுமை செய்தார். இந்நிலையில் சரளா அவருடைய தாய் மற்றும் குழந்தைகள் ஆகியோரை காணவில்லை என்று உறவினர்கள் காவல்துறையில் புகார் அளித்தனர்.
வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கர்நாடகாவில் பதுங்கி இருந்த மௌலாலியை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் கொலை செய்ததையும், பாலியல் வன்கொடுமை செய்ததையும் மௌலாலி ஒப்புக்கொண்டார்.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சித்தூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில், மௌலாலிக்கு மரண தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார்.