ஆபாச புகைப்படம் கேட்டு அகப்பட்டுக் கொண்ட காதல் மன்னன்: வலைவிரித்து சிக்க வைத்த இளைஞர்!

கைது செய்யப்பட்ட மாஸ் சுந்தர்
கைது செய்யப்பட்ட மாஸ் சுந்தர்

சமூக வலைதளத்தில் பல பெண்களுடன் பழகி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய காதல் மன்னனை திருநெல்வேலி சைபர் கிரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். அவரை வலைவிரித்து ஒரு வாலிபர் பிடித்துக் கொடுத்துள்ளார்.

தூத்துக்குடியைச் சேர்ந்த 33 வது இளைஞர் ஒருவருக்கும், திருநெல்வேலி பாளையங்கோட்டையைச் சேர்ந்த 28 வயது பெண்ணிற்கும் கடந்த 2021-ம் ஆண்டு கயத்தாரில் வெகு விமரிசையாக திருமணம் நடந்தது.  இந்நிலையில் பிரசவத்திற்காக கடந்த 2022-ம் ஆண்டு தாய் வீட்டுக்கு சென்ற மனைவி ஆறு மாதங்கள் கழித்து குழந்தையுடன் வீடு திரும்பி இருக்கிறார்.

அன்று முதலே இளைஞரின் மனைவி செல்போனில் பேசுவதும் இன்ஸ்டாவில் சாட் செய்வதுமாக இருந்து வந்துள்ளார். இதுகுறித்து மனைவியிடம் கணவன் கேட்டதால், இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் மனைவிக்குத் தெரியாமல் அவரது செல்போனை எடுத்து கணவர் பார்த்துள்ளார். அதில் மாஸ் சுந்தர் 17 என்ற குறிப்பிட்ட ஐ.டியில் அடிக்கடி அவரது மனைவி சாட் செய்தது தெரியவந்தது. 

காதல்
காதல்

அந்த ஐ.டி நபர் யார் என்று கேட்டதால் மீண்டும் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றதுடன், விவாகரத்து கேட்டு கணவருக்கு வக்கீல் நோட்டீசும் அனுப்பினார். இதனால் கணவர் அதிர்ச்சி அடைந்தாலும், திருமணமான இரண்டே ஆண்டில் தனது வாழ்க்கையில் விளையாடிய அந்த மாஸ் சுந்தர் யார் என்பதை கண்டுபிடிக்க களமிறங்கினார்.

இதற்கான நந்தினி என்ற பெயரில் போலியாக ஒரு கணக்கு தொடங்கினார். அந்த ஐ.டி மூலம் மாஸ் சுந்தருக்கு நட்பு அழைப்பு விடுத்துள்ளார். இந்த வலை தனக்காக விரிக்கப்பட்டது என்று தெரியாமல் மாட்டியிருக்கிறார் மாஸ் சுந்தர். தொடர்ந்து ஆசையுடன் நந்தினியின் பெயரில் இருந்த  இளைஞரிடம் சாட்டிங்கில் பேசி வந்துள்ளார் மாஸ் சுந்தர்.

ஒரு கட்டத்தில் பேச்சு வேறுமாதிரி போயிருக்கிறது. இதனிடையே ஆடையில்லாமல் படங்களை எடுத்து அனுப்ப வேண்டும் என்று நந்தினி ஐ.டியில் இருந்த தூத்துக்குடி இளைஞருக்கு சுந்தர் கூறியிருக்கிறார். ஆனால், தூத்துக்குடி இளைஞர் படங்களை அனுப்புவதாக கூறி தொடர்ந்து சமாளித்து வந்துள்ளார். அதன்பின்னர், தனது ஐ.டிக்கு மற்ற பெண்கள் அனுப்பி வைத்ததாக கூறி ஏராளமான பெண்களின் ஆபாச படங்களை அனுப்பி வைத்துள்ளார் மாஸ் சுந்தர்.

அதில் தன்னுடைய மனைவி புகைப்படம் உள்பட பல்வேறு பெண்களின் புகைப்படங்கள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இளைஞர், இதுகுறித்து திருநெல்வேலி காவல் ஆணையரிடம் சுந்தர் குறித்து புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரணை நடத்திய சைபர் கிரைம் போலீஸார், திருநெல்வேலியைச் சேர்ந்த சுந்தர் என்ற இளைஞரை கைது செய்தனர்.

வேலை  எதுவும் எல்லாம் கையில் ஸ்மார்ட்போனுடன் விதவிதமான ஆடைகள் அணிந்து சுற்றி வந்த சுந்தர், தன்னை வசதி படைத்த இளைஞர் போல் பெண்களிடம் காட்டிக் கொள்வதற்காக போட்டோ ஷூட் நடத்தியும், இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்டு வந்துள்ளார். தன்னை நம்பி பழகும் பெண்களிடம் புகைப்படங்கள் பெற்று ஆபாசமாக மார்பிங் செய்தும், சாட்டிங் விவரங்களை வைத்து மிரட்டியும், பணம் பறித்து வந்தது தெரியவந்தது.

சுந்தரின் செல்போனில் மேலும் பல பெண்களின் புகைப்படங்கள் இருந்ததால், அவரது செல்போனை போலீஸார் பறிமுதல் செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்த போலீஸார் தொடர்ந்து காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in