துபாயில் இருந்து ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்திய கும்பல்: சிக்கியது எப்படி?

துபாயில் இருந்து ஆசன வாயில் மறைத்து தங்கம் கடத்திய கும்பல்: சிக்கியது எப்படி?

துபாயில் இருந்து ஆசன வாயில் மறைத்து நூதனமுறையில் தங்கம் கடத்திவந்த கும்பல் விமான நிலைய சோதனைகளையெல்லாம் மீறி, நாங்குநேரி போலீஸாரிடம் சிக்கிய ருசிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி காவல் ஆய்வாளர் செல்வி தலைமையிலான போலீஸார் நாங்குநேரி சுங்கச்சாவடி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சொகுசு காரை தடுத்து நிறுத்தினர். அந்தக் காரில் புதுக்கோட்டையைச் சேர்ந்த வாலிபர் ஒருவர் உள்பட 4 பேர் இருந்தனர். இவர்கள் துபாயில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்து, அங்கிருந்து கார் மூலம் புதுக்கோட்டை நோக்கிச் செல்வதாகத் தெரிவித்தனர்.

போலீஸார் அவர்கள் மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து விசாரணை நடத்தியபோது காரில் 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தங்கம் இருப்பது தெரியவந்தது. அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர் தன் ஆசனவாய் பகுதியில் மறைத்துவைத்து 50 லட்சம் மதிப்பிலான தங்கத்தையும் கடத்தி வந்திருப்பது தெரியவந்தது. அதுமட்டும் இல்லாமல் திருவனந்தபுரம் விமான நிலையத்தில் கஸ்டம்ஸ் சோதனையையும் மீறி, அதை வெளியே கொண்டுவந்துவிட்ட நிலையில் சாலையில் சிக்கியிருப்பதும் தெரியவந்தது.

நாங்குநேரியில் தங்கத்தோடு 4 பேர் பிடிபட்ட சம்பவம் தெரிந்ததும், திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் அவர்களைக் கைது செய்ய விரைந்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in