அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி ஏமாற்றிய வியாபாரி... கடத்திக் கொன்று புதைத்த கும்பல்!

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.1 கோடி ஏமாற்றிய வியாபாரி... கடத்திக் கொன்று புதைத்த கும்பல்!

அரசு வேலை வாங்கித் தருவதாக 1 கோடி ரூபாய் ஏமாற்றிய தேங்காய் வியாபாரி கடத்தி கொலை செய்து புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை முகப்பேர் மேற்கு ஐஸ்வந்த் நகரைச் சேர்ந்தவர் வெங்கடேசன்(55).. இவர் சொந்தமாக தேங்காய் வியாபாரம் செய்து வந்தார். இவரது மனைவி லட்சுமி(50) இவர்களுக்கு சந்தோஷ், சந்திரகுமார் என 2 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சந்தோஷ்(20) ராமநாதபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

நீட் தேர்வு
நீட் தேர்வு

இந்நிலையில் கடந்த 5-ம் தேதி வெங்கடேசன் மற்றும் லட்சுமி இருவரும் இளையமகன் சந்திரகுமாரை காரில் நீட் தேர்விற்காக குன்றத்தூர் அடுத்த பூந்தண்டலம் பகுதியில் உள்ள சாய்ராம் கல்லூரிக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மகனை இறக்கி விட்டு விட்டு பிறகு கணவன், மனைவி இருவரும் பொள்ளாச்சியில் உள்ள நிலத்தை விற்பது தொடர்பாக செல்வதாக மூத்த மகன் சந்தோஷிடம் கூறி விட்டு சென்றுள்ளனர். நீட் தேர்வு முடிந்த பிறகு சகோதரர் சந்திரகுமாரை அவரது அண்ணன் சந்தோஷ் வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார்.

செல்போன்
செல்போன்

இதன்பின் ஊருக்குச் சென்ற தந்தை- தாய் குறித்து எந்த தகவலும் இல்லாததால் அவர்களை செல்போன் தொடர்பு கொள்ள முயன்ற போது ஒருவரது செல்போனும் சுவிட்ச் ஆப்பாகியிருந்தது. இதனால் பயந்து போன சந்தோஷ், காணாமல் போன தனது பெற்றோரை கண்டுபிடித்து தருமாறு கடந்த 7-ம் தேதி குன்றத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேசன், லட்சுமியின் செல்போன் சிக்னலை வைத்து தீவிரமாக தேடினர்.

இந்நிலையில், சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி பகுதியில் அவர்கள் இருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.இதையடுத்து போலீஸார் அங்கு சென்று பார்த்த போது லட்சுமி மட்டும் இருந்துள்ளார். அவரது கணவர் வெங்கடேசனை காணவில்லை. பின்னர் போலீஸார் லட்சுமியை மீட்டு அவருடன் இருந்த கணேசன், குமரேசன், விக்னேஷ் ஆகியோரை பிடித்து பள்ளிப்பட்டி காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அப்போது பல திடுக்கிடும் தகவல் வெளியானது. ‌‌

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை பகுதியில் வைத்து வெங்கடேசனை அடித்து கொலை செய்து கணேசனுக்கு சொந்தமான தோட்டத்தில் புதைத்த அதிர்ச்சி தகவல் தெரிய வந்தது. சேலத்தை சேர்ந்த கணேசன்‌ தனது நண்பர்கள் சரவணன், கார்த்திக், குமரேசன், விக்னேஷ் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலை செய்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது ‌.

அதில் லட்சுமியை மட்டும் விட்டு விட்டனர். தொடர் விசாரணையில், கார் வாங்கி விற்பனை செய்து வந்த வெங்கடேசன் தற்போது தேங்காய் வியாபாரம் செய்து வந்துள்ளார். அரசு பள்ளி ஆசிரியையாக பணியாற்றி வந்த மனைவி லட்சுமி விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு வீட்டில் இருந்து வருவது தெரியவந்தது.

மேலும் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி லட்சுமி இருவரும் சேர்ந்து குரூப் 4 அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பலரிடம் கோடி கணக்கில் பணத்தை வாங்கி கொண்டு போலி ஆவணங்களை கொடுத்து ஏமாற்றி மோசடியில் ஈடுபட்டது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடம் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் பணத்தைத் திருப்பி கேட்டு நெருக்கடி கொடுத்தனர்.

இதனால் வெங்கடேசன் பொள்ளாச்சியில் உள்ள நிலத்தை விற்று கொடுக்குமாறு கிருஷ்ணகிரியைச் விஜயராஜனிடம் கூறியுள்ளார். இதனால் நேரில் வருமாறு விஜயராஜன் கூறியதை நம்பி கணவன், மனைவி இருவரும் அங்கு சென்றுள்ளனர்.

ஏற்கெனவே சேலத்தை சேர்ந்த கணேசனிடம் வெங்கடேசன் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 1 கோடி ரூபாய் பணத்தை பெற்று ஏமாற்றியதால் கணேசன், விஜயராஜ் மூலம் வெங்கடேசன் அவரது மனைவி வருவதை தெரிந்து கொண்டு தனது நண்பர்களுடன் அங்கு சென்றார். அங்கு அவர்கள் இருவரை அழைத்துச் சென்று வெங்கடேசனை மட்டும் கொலை செய்து கணேசன் புதைத்தது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது ‌.

இதனை அடுத்து வெங்கடேசன் சடலத்தை தோண்டி எடுக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர போகுது மதுரை... அரசியல் மாநாட்டிற்கு தேதி குறித்த விஜய்!

கோடை விடுமுறையில் சோகம்... ஏரியில் குளிக்கச் சென்ற 2 சிறுவர்கள் நீரில் மூழ்கி பலி!

ஹஜ் பயணிகளின் புனித பயணம் தொடங்கியது... டெல்லியில் இருந்து முதல் விமானம் புறப்பட்டது!

எஸ்எஸ்எல்சி மாணவர்களுக்கு குட்நியூஸ்ட்... பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு!

ரூ.90 லட்சம் மதிப்பிலான தங்கம் பறிமுதல்... விமான நிலையத்தில் பரபரப்பு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in