யானைத் தந்தம், புலி நகங்கள் பதுக்கல்: 11 பேரை கைது செய்தது போலீஸ்!

யானைத் தந்தம், புலி நகங்கள் பதுக்கல்: 11 பேரை கைது செய்தது போலீஸ்!

யானைத் தந்தம், புலி நகங்கள் மற்றும் புலி பற்களை பதுக்கி வைத்திருந்த 11 பேரை கைது செய்துள்ள கூடலூர் போலிஸார், அவர்களிடமிருந்தவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலை பகுதியில், யானை தந்தம், புலி நகங்களை விற்பனைக்காக சிலர் பதுக்கி வைத்திருப்பதாக, வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவல்களையடுத்து கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம் உத்தரவின்படி, வனச்சரகர் ராஜேந்திரன் தலைமையிலான வனத்துறையினர், தேவர்சோலை பகுதியில், சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த சிலரை பிடித்து சோதனை செய்தனர்.

அப்போது, அவர்கள் வைத்திருந்த பையில் விற்பனைக்காக வைத்திருந்த எட்டுத் துண்டு யானை தந்தங்கள், இரண்டு புலியின் நகங்கள் மற்றும் பற்கள் ஆகியவற்றை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வனத்துறையினர் அவர்கள் பயன்படுத்திய ஜீப் மற்றும் காரை பறிமுதல் செய்தனர்.

இதில் தொடர்புடைய தேவர்சோலையை சேர்ந்த அப்சல்(22), ஈஸ்வரன் (54), சவுகத் (45), பாபு (50), வினோத்குமார்(19), சமீர் (33), தெப்பக்காடு மாதன் (46), செறுமுள்ளி அனிஷ் (36), ஆர்.பாபு (29), மார்த்தோமா நகர் விஜய் (20), சுரேந்திரன் (19) ஆகிய 11 பேரையும் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in