
புதுக்கோட்டையில் தனது 14 வயது மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் சித்துபட்டியை சேர்ந்தவர் கதிரவன். அங்குள்ள வெல்டிங் பட்டறையில் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். அவர் அங்குள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில் கதிரவன் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவி இல்லாத வேளையில் மகளிடம் தவறாக நடக்க முயன்றுள்ளார். இதனை வெளியில் சொன்னால் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
இதனை மகள் தாயிடம் கூறிய நிலையில், தாய் அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்த போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும், ஆசிரியரிடம் இதுகுறித்து மாணவி கூறிய நிலையில், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகத்தில் ஆசிரியர் புகார் அளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெற்ற மகளுக்கு தந்தை பாலியல் தொல்லை கொடுக்க முயன்ற சம்பவம் புதுக்கோட்டையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
சோகம்... காதல் திருமணம் செய்த மகன்... மனமுடைந்த பெற்றோர் தற்கொலை!
கல்லூரி விடுதியில் மாணவி தற்கொலை! உருக்கமான கடிதம் சிக்கியது!
பகீர் வீடியோ... காதலியின் கண் முன்னே கொலை செய்யப்பட்ட கவிஞர்!
அதிர்ச்சி... பள்ளத்திற்குள் பஸ் கவிழ்ந்து 3 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியான சோகம்!