பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தந்தை: மனைவி மீதான சந்தேகத்தால் நடந்த விபரீதம்

பச்சிளம் குழந்தையை தெருவில் வீசிய தந்தை: மனைவி மீதான சந்தேகத்தால் நடந்த விபரீதம்

மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் தன்னுடைய 6 மாத ஆண் குழந்தையை தந்தை ஒருவர் தெருவில் வீசியதோடு, விசாரணைக்கு பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

சென்னை கீழ்பாக்கம் புல்லாபுரம் பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி சுரேஷ்(35)

இவருக்கும் த்ரிஷா என்ற பெண்ணுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி 6 மாதத்தில் ஆண் குழந்தை ஒன்று உள்ளது. இந்நிலையில் மது பழக்கத்திற்கு அடிமையான சுரேஷ் தினமும் குடித்து விட்டு வந்து மனைவி த்ரிஷாவிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும் தனது மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த சுரேஷ் தினமும் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்று இரவு த்ரிஷா குழந்தையுடன் தூங்கி கொண்டிருந்தபோது வேலை முடிந்து குடிபோதையில் வீட்டிற்கு வந்த சுரேஷ், குழந்தை அருகில் சென்று படுத்து கொண்டதுடன் குழந்தை மீது கைகளை போட்டுள்ளார். உடனே த்ரிஷா, குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்படும் என்றும் குழந்தை மீது கைபோட வேண்டாம் என்றும், குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டுமென்றும் கூறி குழந்தையை தூக்கி கொண்டார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் குழந்தை மீது கை போட கூடாதா என்று தகராறில் ஈடுபட்டதுடன் குழந்தை பிடுங்கி ரயில்வே தண்டவாளத்தில் வீசி விடுவதாக கூறி எடுத்து சென்றுள்ளார்.

உடனே த்ரிஷா கூச்சலிட்டத்தை அடுத்து அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்களை கண்டதும் சுரேஷ் கையில் இருந்த குழந்தையை தெருவில் வீசினார். இதில் குழந்தை தலை, கை, கால்களில் காயம் ஏற்பட்டது. உடனே த்ரிஷா, குழந்தையை மீட்டு எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு மருத்துவர்கள் குழந்தைக்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தகவல் அறிந்து சம்பவயிடத்திற்கு சென்று கீழ்ப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே மனைவியின் உறவினர்கள் தன்னை தாக்கியதாக கூறி ஆலா மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்ற சுரேஷை உறவினர்கள் மீட்டு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் உள்ள சுரேஷிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in