ரயில் பெட்டியில் இருந்து தனியாக கழன்று ஓடிய இன்ஜின்... கூச்சலிட்ட பயணிகள்... பெரும் விபத்து தவிர்ப்பு!

ரயில் விபத்து
ரயில் விபத்து

மகாராஷ்டிராவில் ரயில் நிலையம் அருகில் ரயிலில் இருந்து இன்ஜின் மட்டும் தனியாக கழன்று சென்றதால், பதட்டமான பயணிகள் கூச்சலிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மும்பை போரிவிலியில் இருந்து குஜராத் மாநிலம் அகமதாபாத் நோக்கி சென்ற எக்ஸ்பிரஸ் ரயில் பகல் 1.30 மணி அளவில் புறப்பட்டது. இந்த ரயில் பிற்பகல் 2.15 மணி அளவில் விராரை அடுத்த வைத்தர்ணா ரயில் நிலையம் அருகே வந்தது. அப்போது திடீரென ரயில் என்ஜின் தனியாக கழன்று ஓடியது . இன்ஜினுக்கும் ரயில் பெட்டிக்கும் இடையே உள்ள இணைப்பு துண்டிக்கப்பட்டதால் இந்த விபத்து நடந்ததுள்ளது.

இந்த சம்பவம் நடந்த போது டமார் என்ற சத்தம் கேட்டதால் பயணிகள் அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டனர். சிறிது நேரம் ஓடிய இன்ஜினை டிரைவர் நிறுத்தினார். ரயில் பெட்டிகள் சிறிது நேரம் ஓடியபடி நின்றது. ரயில் மெதுவாக சென்று கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

தகவல் அறிந்து ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ரயில் பெட்டிகளை மீண்டும் பிணைத்து சரி செய்தனர். இதன் பின்னர் தாமதமாக அங்கிருந்த ரயில் புறப்பட்டு அகமதாபாத் நோக்கி சென்றது. பயணிகளை பதற்றத்துக்கு உள்ளாக்கிய இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று முதல் அமலுக்கு வரும் புதிய திட்டங்கள், கட்டுப்பாடுகள் இவை தான்!

'நடிகர் திலகம்’ சிவாஜி கணேசன் பிறந்தநாள் ஸ்பெஷல்: ‘பராசக்தி’ முதல் ‘படையப்பா’ வரை!

எல்ஐசி ஹைட்டு... எடப்பாடியார் வெயிட்டு!

‘ஆடியோ லாஞ்ச் கேன்சல்’ அதிமுகவைத் தேடிப்போன அண்ணாமலை!

நாளை தமிழகம் முழுவதும் 12,525 ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in