`நீ ரொம்ப குண்டு, அதனால் உனக்கு விடுதலை'- காதலியை கொடூரமாக கொன்றவரை விடுவித்த நீதிமன்றம்!

காதலியுடன் டிமிட்ரி ஃப்ரிகானோ
காதலியுடன் டிமிட்ரி ஃப்ரிகானோ

காதலியைக் கொடூரமாக குத்திக் கொன்ற குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்ட இளைஞர்,  அதிக எடையுடன் இருப்பதால் நீதிமன்றம் அவரை விடுவித்துள்ள வினோதம் இத்தாலியில் நடந்துள்ளது. 

ரோம் நகரைச் சேர்ந்த டிமிட்ரி ஃப்ரிகானோ என்ற நபர், கடந்த 2017ம் ஆண்டில் தனது 25 வயது காதலி எரிகா ப்ரீட்டி என்பவருடன் விடுமுறையை கழிப்பதற்காக சுற்றுலாத்தலம் ஒன்றுக்கு சென்றிருந்தார். அப்போது இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. இருவரும் மாறி மாறி திட்டிக்கொண்ட நிலையில் ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தனது காதலி எரிகாவை கத்தியால் குத்தி கொடூரமாகக் கொலை செய்தார். மொத்தம் 57 முறை  கத்தியால் குத்தியுள்ளார்.

இது குறித்த விசாரணை நடைபெற்ற நிலையில், 2019ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. டிமிட்ரி தனது காதலியைக் கொலை செய்தது உறுதியான நிலையில், அவருக்கு 19 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இருப்பினும், மேல்முறையீடு, கொரோனா உள்ளிட்ட காரணங்களால்  அவர் இரண்டு ஆண்டுகள் சிறைக்கு செல்லவில்லை.  2022ல் தான் சிறைக்குச் சென்றார்.  சிறைக்குச் செல்லும்போது டிமிட்ரியின் உடல் எடை 120 கிலோவாக இருந்தது. 

சிறைக்குச் சென்றபிறகு அவரது உடல் எடை 200 கிலோ வரை அதிகரித்துவிட்டது. இதன் காரணமாக அவரால் நடக்கவே முடியவில்லையாம். சக்கர நாற்காலி அல்லது ஊன்றுகோல் உதவியுடன் நடக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த ஓவர் எடை டிமிட்ரியை சிறைக்குப் பொருந்தாதவராக மாற்றுவதாகக் குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.

அதிக எடையால் அவதிப்பட்டு வரும் டிமிட்ரி இப்போது உடல் எடையைக் குறைக்க வேண்டும். இதற்கு அவர் குறைந்த கலோரி உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால், சிறையில் குறைந்த கலோரி உணவிற்கு எல்லாம் வாய்ப்பே இல்லை. இதனால் அவருக்கு வழக்கமான உணவே தரப்பட்டுள்ளது. இதனால் அவரது உடல் எடை அதிகரித்துக் கொண்டே சென்றுள்ளது.

அவர் சிறையில் தொடர்ந்து இருந்தால் அது அவரது உயிருக்கு ஆபத்தாக முடியும் என்று குறிப்பிட்ட நீதிமன்றம், அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.  அவர் சிறையில் இருக்கத் தேவையில்லை. அதற்குப் பதிலாக அவர் வீட்டுச் சிறையில் இருக்கலாம். உடல் எடையைக் குறைக்க அவருக்குக் குறைந்த கலோரி உணவு கிடைக்கும் என்பதால் வீட்டுச் சிறையில் அவரை வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

உடல் பருமனைக் காரணம் காட்டி அவரை இத்தாலி நீதிமன்றம் விடுதலை செய்துள்ளதற்கு  பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

சிவகாசி : தீபாவளிக்கு ரூ.6,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனை!

நாளை தெறிக்கப் போகுது தமிழகம்... 234 தொகுதிகளில் 8,647 கி.மீ தூரம் திமுக வாகனப் பேரணி!

பனிக்குடம் உடைந்து கதறிய கர்ப்பிணி: 108 ஆம்புலன்ஸில் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்!!

இடுப்பளவு நீரில் மூழ்கிய நெற்பயிர்கள்: தொடர் மழையால் விவசாயிகள் கண்ணீர்!

ரூ.40 லட்சம் மதிப்புள்ள இறால்கள் மடிந்த சோகம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in