வேறு ஒருவருடன் திருமணம்: கல்யாண மண்டபத்தில் காதலியைச் சுட்டுக் கொன்ற காதலன்!

வேறு ஒருவருடன் திருமணம்: கல்யாண மண்டபத்தில் காதலியைச் சுட்டுக் கொன்ற காதலன்!
மணக்கோலத்தில் காஜல்.

தனது காதலி வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்வதை பொறுக்க முடியாத காதலன், திருமண மண்டபத்தில் நுழைந்து காதலியை சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவை சேர்ந்தவர் அனீஷ். இவர் அதே பகுதியைச் சேர்ந்த காஜலை காதலித்துள்ளார். இந்த நிலையில் காஜலுக்கு முபாரிக் கிராமத்தில் உள்ள நெளஜீல் பகுதியில் வேறு ஒருவருடன் திருமணம் நிச்சயமானது. இதனால் அதிர்ச்சியடைந்த அனீஷ், தன்னைக் காதலித்தவர், வேறு ஒருவரைத் திருமணம் செய்வதா என மனஉளைச்சலுக்கு உள்ளானார். இதனால், தனது காதலியைக் கொல்ல திட்டமிட்டார்.

இதன்படி திருமண நாளான நேற்று காதலியைக் கொலை செய்ய மண்டபத்திற்கு அனீஷ் சென்றார். மணமகளான காஜல் வேறு உடை மாற்றுவதற்காக அறைக்கு வந்த போது, அங்கு வந்த அனீஷ், காஜலை நாட்டுத்துப்பாக்கியால் சுட்டார். இதில் கண்ணில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து காஜல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவத்தால் திருமண மண்டபத்தில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அங்கிருந்து அனீஷ் தப்பினார். இதுகுறித்து காஜலின் தந்தை குபிராம் பிரஜாபதி புகாரின் பேரில் அனீஷ் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.