
நாய் குரைத்ததற்காக அதன் அந்தரங்க உறுப்பை கம்பியால் சிதைத்து துண்டித்த வாலிபர், அதைத் தடுத்த இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த அதிர்ச்சி சம்பவம் புவனேஸ்வரில் நடைபெற்றுள்ளது.
ஒடிசா மாநிலம் புவனேஸ்வரைச் சேர்ந்தவர் சந்தன்நாயக். அவர் மீது 23 வயது பெண் ஒருவர், போலீஸில் நேற்று புகார் அளித்துள்ளார். அதில்," நேற்று முன்தினம் சாலையில் சென்ற போது நான் வளர்த்த நாய் குரைத்ததற்காக சந்தன் நாயக்கும், அவரது தந்தையும் எனது வீட்டிற்கு வந்து தகராறு செய்தனர். அத்துன் நாயக், என் ஆடைகளைக் களைந்து பாலியல் பலாத்காரம் செய்தார். அவரது தந்தையும் என்னைப் பலாத்காரம் செய்ய முயன்றார்.
அத்துடன், இரும்புக்கம்பியால், என் நாயின் அந்தரங்க பகுதியை சந்தன் நாயக் சிதைத்து துண்டித்தார். எனவே, அவர்கள் இருவர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கூறியுள்ளார்.
இப்புகார் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளதாக தலைநகர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பத்மநாவ் பிரதான் தெரிவித்தார். அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக விரைவில் சட்ட நடவடிக்கை எடுப்போம் என்றும் கூறினார். இந்த சம்பவம் புவனேஸ்வரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.