மதுரையில் பகீர்... ரயில் இன்ஜினில் சிக்கி இருந்த இளைஞரின் உடல்; அலறிய பயணிகள்!

மதுரையில் பகீர்... ரயில் இன்ஜினில் சிக்கி இருந்த இளைஞரின் உடல்; அலறிய பயணிகள்!

மதுரைக்கு வந்த பொதிகை ரயில் இன்ஜின் முன் இறந்த நிலையில் சிக்கி இருந்த இளைஞரின் உடலைக் கண்டு பயணிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

செங்கோட்டை - சென்னை வரையில் செல்லும் பொதிகை ரயில் நேற்று மாலை வழக்கம்போல் செங்கோட்டையில் இருந்து புறப்பட்டு இரவு 9.30 மணிக்கு மதுரை நோக்கி வந்து கொண்டிருந்தது. மதுரை ரயில் நிலையம் வந்தபோது இன்ஜினின் முன் பகுதியில் இளைஞரின் உடல் சிக்கி இருப்பதை கண்ட பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த  ரயில்வே போலீஸார் அங்கு விரைந்து இன்ஜினின் முன் பகுதியில் சிக்கி இருந்த உடலை அப்புறப்படுத்தி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டபோது மதுரை கப்பலூர் பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவர் ரயிலில் தற்கொலை செய்ய முயன்ற போது இன்ஜினின் முன் பகுதியில் உடல்  சிக்கி இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.

வேறு ஏதும் காரணம் உள்ளதா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் பொதிகை ரயிலானது 45 நிமிடங்களுக்கு மேலாக மதுரை ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் புறப்பட்டு சென்றது.

இதையும் வாசிக்கலாமே...

அதிர்ச்சி... சென்ட்ரல் ரயில் நிலையத்தில் குழந்தை கடத்தல்; 5 மணி நேரத்தில் தம்பதி கைது!

குட் நியூஸ்... ரூ.400க்கு சமையல் சிலிண்டர்; ரூ.5 லட்சம் காப்பீடு; முதல்வர் அறிவிப்பு!

இஸ்ரேல் தாக்குதலில் ஹமாஸ் படையின் 2வது தளபதி பலி!

புது கெட்டப்பில் விஜய்சேதுபதி... வைரலாகும் வீடியோ!

இன்று காலை தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் அதிரடி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in