பட்டப்பகலில் வீடு புகுந்து கியாஸ் சிலிண்டர் திருட்டு... வைரலாகும் வீடியோ!

சிலிண்டரை திருடிச்செல்லும் நபர்
சிலிண்டரை திருடிச்செல்லும் நபர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே பகலிலேயே சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் செல்லும் மர்மநபர்களின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களின் நடமாட்டத்தை நோட்டமிட்ட நபர்
மக்களின் நடமாட்டத்தை நோட்டமிட்ட நபர்

கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்பு அருகே சென்னிநத்தம் பகுதியைச் சேர்ந்தவர் ரவி. இவரது வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வரும் கலைவாணி சமையல் எரிவாயு சிலிண்டர் தீர்ந்து விட்டதால், நேற்று காலை காலி சிலிண்டரை ரவி வீட்டின் முன்பாக வைத்திருந்தார். புதிய சிலிண்டருக்காக புக் செய்துவிட்டு பணிக்குச் சென்று விட்டார்.

முன்னதாக அவர் அளித்த தகவலின்பேரில், அங்கு வரும் சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகிக்கும் நபர், புதிய சமையல் சிலிண்டரை வைத்துவிட்டு, கலைவாணி வைத்திருந்த காலி சிலிண்டரை எடுத்துச் சென்றார்.

காவல்துறை விசாரணை
காவல்துறை விசாரணை

இதை அருகிலிருந்தபடி நோட்டமிட்ட இருவர், சமையல் எரிவாயு சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர் சென்றதும், அந்த வீட்டிற்குள் சென்று பார்க்கின்றனர். இதில் ஒருவர் நம்மை யாரேனும் நோட்டமிடுகிறார்களா என பார்க்கிறார். மற்றொருவர் யாரும் வராததைப்பார்த்த பின்பு, அங்கு இருந்த சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச்செல்கின்றார். இதுகுறித்தான காட்சி ரவி வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவானது.

பட்ட பகலிலேயே சமையல் எரிவாயு சிலிண்டரை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சிலிண்டரை திருச்சென்றவர்கள் குறித்து வீட்டின் உரிமையாளர் ரவியும், அங்கு வாடகைக்கு வசித்து வரும் கலைவாணியும் காவல் நிலையத்தில் இன்று காலை சிசிடிவி காட்சிகள் ஆதாரத்துடன் புகார் அளித்தனர். இதன் பேரில், போலீஸார் வழக்குப்பதிவு செய்து சிலிண்டரை திருடிய இருவரை தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    
வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in