ராமேஸ்வரத்தில் 5வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் போராட்டம்... ரூ.10 கோடி இறால் ஏற்றுமதி பாதிப்பு!

ராமேஸ்வரத்தில் 5வது நாளாக நீடிக்கும் வேலை நிறுத்தம் போராட்டம்... ரூ.10 கோடி இறால் ஏற்றுமதி பாதிப்பு!

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வர மீனவர் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் ஈடுபட்டுள்ளதால் ரூ.10 கோடி இறால் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்று கச்சத்தீவு பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த சர்புதீன், லிட்டன், மண்டபத்திலிருந்து கடலுக்குச் சென்ற மரிய வாஷிங்டன் ஆகியோருக்குச் சொந்தமான 3 விசைப்படகுகளையும், அதிலிருந்த 12 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கடந்த சனிக்கிழமை இரவு சிறைப்பிடித்தனர். 12 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் ராமேஸ்வரத்தில் இருந்து கடலுக்குச் சென்று, தலைமன்னார் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை மீன்பிடித்துக் கொண்டிருந்த கென்னடி, பாஸ்கர் ஆகியோருக்குச் சொந்தமான 2 விசைப் படகுகளையும், அதில் இருந்த 15 பேரையும் இலங்கை கடற்படை சிறைப் பிடித்தது.

இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிக்க வலியுறுத்தி 5வது நாளாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக ரூ.10 கோடி மதிப்பிலான இறால் மீன்கள் ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலையிழந்து பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் வருகிற 1ம்தேதி ராமேஸ்வரத்தில் ரயில் மறியல் போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதையும் வாசிக்கலாமே...

சென்னையில் பரபரப்பு... பாஜக அலுவலகத்தைச் சூறையாடிய பிரபல ரவுடி!

செம மாஸ்... நடுரோட்டில் தெறிக்க விட்ட ரஜினி... வைரலாகும் வீடியோ!

பிரபல நடிகை சரணடைய உயர் நீதிமன்றம் உத்தரவு! திரையுலகில் பரபரப்பு!

நாளை விண்ணில் பாய்கிறது 'ககன்யான்' சோதனை விண்கலன்... தொடங்கியது கவுண்டவுன்!

லெஸ்பியன்னு சொல்லு... கெத்தா இருக்கும்; சர்ச்சைக் கிளப்பும் ட்ரைலர்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in