பெற்றோர் கொடுத்த கார் பரிசு… நண்பனுடன் ஜாலி பயணம்; விபத்தில் 17 வயது ம‌கன் உயிரிழந்த துயரம்!

விபத்துக்குள்ளான கார்
விபத்துக்குள்ளான கார்

மகாராஷ்டிரா மாநிலம் தானே பகுதியை சேர்ந்தவர் மனவ் தர்வானி(17). இவருக்கு பெற்றோர் கார் ஒன்றைய பரிசாக வாங்கிக்கொடுத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று இரவு மனவ் தனது நண்பர் குஷால் தவானியுடன் காரில் ஊர் சுற்ற சென்றுள்ளார். அப்போது அதிவேகமாக சென்ற கார் மகாராஷ்டிராவின் உல்ஹாஸ்நகர் - அம்பர்நாத் சாலை ஓரம் இருந்த மரத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் உடனடியாக போலீஸூக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீஸார் காருக்குள் சிக்கியிருந்த இரண்டு வாலிபர்களையும் கடும் போராட்டத்திற்குப் பின்னர் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

அங்கு அவர்களைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் இருவரும் வரும் வழியிலேயே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்த மனவ் என்ற இளைஞரின் பெற்றோர் தனது மகனுக்குப் புதிதாக கார் ஒன்றைப் பரிசாகக் கொடுத்ததாக தெரியவந்தது. ஆனால், மனவ் தர்வானியின் பெற்றோரோ, அந்த கார் தங்கள் மகள் தங்களுக்கு அளித்த பரிசு என்று தெரிவித்துள்ளனர். மேலும், மகன் காரை எடுத்து சென்றது தங்களுக்கு தெரியாது என்றும் கூறியுள்ளனர். இதுகுறித்த முழு உண்மையை அறிய போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சாலை விபத்தில் இரண்டு நண்பர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in