டெல்லியில் அதிர்ச்சி... நேரு ஸ்டேடியம் அருகே இடிந்து விழுந்த கட்டுமானம்; 12 பேரின் கதி என்ன?

சரிந்து விழுந்த கட்டுமானம்
சரிந்து விழுந்த கட்டுமானம்

டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம் அருகே ஒரு தற்காலிக கட்டுமானம் இன்று இடிந்து விழுந்தது. இதில் 12 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியத்தின் கேட் எண்-2 அருகே இன்று திருமண நிகழ்ச்சி ஒன்றுக்காக தற்காலிக கட்டுமானம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வந்தது.

இதில் 15-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் இந்த கட்டுமானம் எதிர்பாராதவிதமாக இடிந்து விழுந்தது. இதில் 12 தொழிலாளர்கள் படுகாயமடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தரப்பில் தெரிவித்தனர்.

டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்
டெல்லி ஜவஹர்லால் நேரு ஸ்டேடியம்

பல தொழிலாளர்கள் மதிய உணவுக்கு சென்றிருந்ததால் இந்த விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக தப்பித்தனர். எனினும் மேலும் சில தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பதாகவும் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. டெல்லி போலீஸார், தீயணைப்புத் துறையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். இந்த விபத்து சம்பவம் டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் வாசிக்கலாமே...  


‘ஜோக்கர் இப்போ ஹீரோவானேன்...’ நடிகர் சிவகார்த்திகேயன் பிறந்தநாள் ஸ்பெஷல்!

மிஸ் பண்ணிடாதீங்க... இன்று 17 மாவட்டங்களில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்!

டெஸ்ட் போட்டியில் இருந்து திடீரென விலகிய அஸ்வின்... ஐசிசி விதியால் சிக்கலில் இந்திய அணி!

அதிர்ச்சி வீடியோ... யானையை காரில் துரத்திய அதிமுக பிரமுகர்: ரூ.1 லட்சம் அபராதம் விதித்த வனத்துறை!

அதிமுக ஆட்சியில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை - எஸ்.பி.வேலுமணி உறுதி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in