பிரபல சின்னத்திரை நடிகை விபத்தில் மரணம்; திரையுலகினர் இரங்கல்!

நடிகை பவித்ரா ஜெயராம்
நடிகை பவித்ரா ஜெயராம்

ஆந்திர மாநிலத்தில் பிரபல சீரியல் நடிகை பவித்ரா ஜெயராம், கார் விபத்தில் உயிரிழந்திருப்பது அவரது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் தொலைக்காட்சி தொடர்களில் நடித்து பிரபலமாக இருந்து வந்தவர் பவித்ரா ஜெயராம். தெலுங்கு மொழியில் ஒளிபரப்பாகி வரும் திலோத்தமா மற்றும் திரனானி ஆகிய சீரியல்களில் நடித்ததின் மூலம் அவர் ரசிகர்களிடையே பிரபலமாக இருந்து வந்தார். மேலும் கன்னட மொழி தொலைக்காட்சி தொடர்களிலும் அவர் நடித்து வந்தார். நேற்று சீரியல் படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலம் மாண்டியாவிலிருந்து தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்திற்கு கார் மூலம் அவர் சென்றுக் கொண்டிருந்தார். அவருடன் அவரது சகோதரி அபிக்‌ஷா, நடிகர் சந்திரகாந்த் மற்றும் ஓட்டுநர் ஸ்ரீகாந்த் ஆகியோர் சென்றுள்ளனர்.

நடிகை பவித்ரா ஜெயராம்
நடிகை பவித்ரா ஜெயராம்

படப்பிடிப்பை முடித்துக் கொண்டு நால்வரும் மீண்டும் மாண்டியா திரும்பிக் கொண்டிருந்தனர். மெகபூப் நகர் அருகே இவர்களது கார் சென்றுக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையின் நடுவே இருந்த டிவைடர் மீது மோதி விபத்துக்குள்ளானது. அப்போது அவ்வழியே வந்த பேருந்து ஒன்று காரின் வலது பக்கத்தில் அதிவேகத்தில் மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே பவித்ரா ஜெயராம் உயிரிழந்தார். காரில் இருந்த மற்ற மூவரும் படுகாயம் அடைந்தனர்.

நடிகை பவித்ரா ஜெயராம்
நடிகை பவித்ரா ஜெயராம்

உடனடியாக அருகில் இருந்தவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பவித்ரா உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதனிடையே இந்த தகவல் பரவியதை அடுத்து தொலைக்காட்சி நடிகர், நடிகைகள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அவர்கள் தங்களது ஆழ்ந்த இரங்கல்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர். அந்த பதிவுகளில் ரசிகர்களும் தங்களது இரங்கல்களை பதிவு செய்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in