தெலங்கானாவில் அதிர்ச்சி... அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
தெலங்கானா மாநில கல்வித்துறை அமைச்சரின் பாதுகாவலர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநில கல்வி அமைச்சராக இருப்பவர் சபிதா இந்திரா ரெட்டி. இவரது பாதுகாப்பு அதிகாரியாக முகமது பசல் அலி பணிபுரிந்து வருகிறார். இன்று காலை 7 மணியளவில் ஹைதராபாத்தில் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் இருந்த ஒரு ஹோட்டலுக்கு வெளியே அவர் தனது துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
தகவல் அறிந்து அங்குவந்த போலீஸார், அவரது உடலை மீட்டு உஸ்மானியா பொது மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

இன்று வழக்கம் போல் காலை 6 மணிக்கு அவர் பணிக்கு வந்ததும் அதன் பிறகு தனது மகளுடன் அலைபேசியில் பேசியதும் தெரிய வந்துள்ளது. போலீஸாரின் முதல் கட்ட விசாரணையில் நிதிப் பிரச்சினை காரணமாக பசல் அலி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது.
இதையும் வாசிக்கலாமே...
பரபரப்பு… காஞ்சிபுரத்தில் அடுத்தடுத்து வெடிகுண்டு மிரட்டல்!
கணவர் மிரட்டுகிறார்... காவல்துறையில் முன்னாள் அமைச்சர் சந்திர பிரியங்கா புகார்!
பத்து தொகுதிகள்... பலிக்குமா பாஜக போடும் கணக்கு?
ஆதிக்கம் செலுத்தப்போவது யார்? இந்தியா – தென்னாப்பிரிக்கா இன்று மோதல்!