69 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபர் - நீதிமன்றம் கடும் தண்டனை!

 சிறை
சிறை
Updated on
1 min read

கர்நாடகாவில் 69 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமை செய்த வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை விதித்து ஹாசன் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கர்நாடக மாநிலம் ஹாசன் தாலுகா கட்டையா அருகே பனவாசே கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 26). அதே கிராமத்தில் 69 வயது மூதாட்டி தனியாக வசித்து வருகிறார். கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 29-ந்தேதி ரமேஷ், மூதாட்டியின் வீட்டு மேற்கூரை ஜன்னலை கல்லால் தாக்கி உடைத்து உள்ளே புகுந்துள்ளார். பின்னர் மூதாட்டி என்றும் பார்க்காமல் அவரை கொடூரமான முறையில் அவரை பாலியல்வன்கொடுமை செய்துள்ளார்.

தீர்ப்பு - Justice
தீர்ப்பு - Justiceதீர்ப்பு - Justice

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டி ஹாசன் மகளிர் காவல்துறையில் புகார் அளித்தார். அதன்பேரில் ரமேஷ் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுதொடர்பான வழக்கு ஹாசன் மாவட்ட 2-வது கூடுதல் மற்றும் செசன்சு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதில் வழக்கு விசாரணை நேற்று முன்தினம் முடிந்த நிலையில், மூதாட்டியை கொடூரமான முறையில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டு ரமேஷ் மீது நிரூபிக்கப்பட்டது. எனவே அவருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்தும் நீதிபதி உத்தரவிட்டார். மேலும் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in