அதிர்ச்சி வீடியோ! அரசுப் பேருந்து மோதி நொறுங்கிய பைக்... நடுரோட்டில் வாலிபர் உயிரிழப்பு!

அதிர்ச்சி வீடியோ! அரசுப் பேருந்து மோதி நொறுங்கிய பைக்... நடுரோட்டில் வாலிபர் உயிரிழப்பு!

அரசு பேருந்து மோதி பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சி வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடி அருகே உள்ள நரிப்பையூர் பெரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மனோகர். இவருக்கு மனைவி, மூன்று மகள்கள், விஜய் என்ற மகனும் உள்ளனர். தனது சகோதரி திருமணம் நடைபெற உள்ள நிலையில் அதற்கான பொருட்களை வாங்க குடும்பத்தினர் சென்றிருந்தனர். அதே நேரத்தில் சாயல்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலையில் விஜய் மட்டும் தனியாக பைக்கில் சென்றுள்ளார்.

வி.வி.ஆர்.நகர் அருகே விஜய் சென்று கொண்டிருந்த போது ராமநாதபுரத்தில் இருந்து திசையன்விளை நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து பயங்கரமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த மனோகர் ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூரை சேர்ந்த அரசு பேருந்து ஓட்டுநர் இசக்கியப்பன் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அவரை கைது செய்தனர். இந்த விபத்து தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி நெஞ்சை பதைபதைக்க வைத்துள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in