திருமணம்
திருமணம்

நிர்வாண வீடியோவை வைத்து மிரட்டுறாங்க... திருநங்கை மனைவி, மாமியார் மீது வாலிபர் பரபரப்பு புகார்!

Published on

நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு 20 லட்ச ரூபாய் கேட்டு மிரட்டுவதாக திருநங்கை மனைவி மற்றும் மாமியார் மீது வாலிபர் புகார் அளித்துள்ளது மொராதாபத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மொராதாபத்
மொராதாபத்

உத்தரப்பிரதேச மாநிலம், மொராதாபத்தில் உள்ள பிஜ்னோர் மாவட்டத்தைச் சேர்ந்த வாலிபருக்கு 2019-ம் ஆண்டு பிரம்மாண்டமான முறையில் திருமணம் நடைபெற்றது. முதலிரவு அன்று தனது மனைவி திருநங்கை என்பதை அறிந்த மணமகன் அதிர்ச்சியடைந்தார். உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது, விவகாரத்து வேண்டும் என்று வாலிபர் தனது திருநங்கை மனைவியிடம் கேட்டுள்ளார்.

அப்போது அவர், பாலின மாற்றத்திற்கு உள்ளாகியிருப்பதாகவும், இதை வெளியே சொன்னால் வாலிபர் குடும்பத்தினர் மீது பொய் வழக்குப் போடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

நிர்வாண வீடியோ
நிர்வாண வீடியோ

இதனால் அச்சமடைந்த அந்த வாலிபர், தற்போது கோட்வாலி காவல் நிலையத்தில் தனது மனைவி மற்றும் மாமியார் மீது பரபரப்பு புகார் கூறியுள்ளார். அதில்." எனது திருநங்கை மனைவியும், அவரது தாயும் பணம் கேட்டு அடிக்கடி தாக்கினர். அத்துடன் என்னை நிர்வாண வீடியோ எடுத்து வைத்துக் கொண்டு 20 லட்ச ரூபாய் தராவிட்டால் அதை வெளியிடுவோம் என மிரட்டினர்.

அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் தொடர்ந்து சித்ரவதை செய்தனர். நான்கு வருடங்களாக இந்த சோதனைத் தாங்கிய என்னால், இனியும் இந்த கொடுமையை அனுபவிக்க முடியாது. எனவே, நிர்வாண வீடியோ எடுத்து மிரட்டும் திருநங்கை மனைவி, அவரது தாய் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

இதையடுத்து கோட்வாலி போலீஸார், இந்திய தண்டனைச் சட்டத்தின் (ஐபிசி) தொடர்புடைய பிரிவு 323 (தன்னிச்சையாக காயப்படுத்துதல்), பிரிவு 384 (பணம் பறித்தல்), பிரிவு 420 (ஏமாற்றுதல்), பிரிவு 504 (ஆத்திரமூட்டும் நோக்கத்துடன் வேண்டுமென்றே அவமதித்தல்) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அத்துடன் பாதிக்கப்பட்டவருக்கு உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பகீர்... 250 பாலஸ்தீன குழந்தைகள் மரணம்!

பிறந்து 72 நாட்களில் 31 வகையான சான்றிதழ்கள்... உலக சாதனை படைத்த குழந்தை

க்ளாமர் லுக்கில் கெத்து காட்டும் நயன்தாரா!

இடது பக்கம் அண்ணாமலை... நடுவில் முதல்வர் விஜய்யாம்... வலது பக்கம் டிடிவி; ரசிகர்களின் அட்ராசிட்டி போஸ்டர்

மாணவர்களுக்கு சப்ளை... உல்லாச வாழ்க்கை; 3,750 போதை மாத்திரைகளுடன் 4 இளைஞர்கள் கைது

x
காமதேனு
kamadenu.hindutamil.in