ஆடல், பாடல் நிகழ்ச்சியில் ஷாக்... விஷப்பாம்பை வைத்து நடனமாடிய இளைஞர் கைது!

பாம்புடன் முகில் வண்ணன்
பாம்புடன் முகில் வண்ணன்

தேனி அருகே ஆடல். பாடல் நிகழ்ச்சியில் விஷப் பாம்புடன் நடனம் ஆடிய இளைஞரை வனத்துறையினர் கைது செய்தனர்.

தேனி மாவட்டம், முத்துதேவன்பட்டியில் அண்மையில் நடந்த கோயில் திருவிழாவில் ஆடலும், பாடல் நிகழ்ச்சி நடந்தது. அதில் நாகப்பாம்பு மற்றும் சாரை பாம்புகளுடன் ஒருவர் நடனம் ஆடினார்.

அதனை வீடியோ எடுத்த சிலர் வனத்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து மாவட்ட வன அதிகாரி உத்தரவுப்படி, தேனி வனச்சரகர் செந்தில்குமார் தலைமையிலான வனத்துறையினர் வீடியோ ஆதாரங்களைக் கொண்டு விசாரணை நடத்தினர்.

பிடிபட்ட  முகில் வண்ணன்
பிடிபட்ட முகில் வண்ணன்

அதில் பாம்புகளுடன் நடனம் ஆடியது தேனி வீரபாண்டியைச் சேர்ந்த முகில் வண்ணன் (23) எனத் தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரிகள், அவரிடமிருந்து ஐந்து பாம்புகளை பறிமுதல் செய்தனர்.

மீட்கப்பட்ட பாம்புகளுக்கு பல் பிடுங்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. அவர் சிறுவயது முதலே பாம்பு பிடிப்பதில் கைதேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. பாம்புகளைப் பிடித்து நடனக் குழுக்களில் சேர்ந்து நடனம் ஆடுவதை வழக்கமாக கொண்டிருந்தார்.

மேலும், சில நடன குழுக்களுக்கு பாம்புகளை வாடகைக்கு விடுவதும் தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட முகில்வண்ணன் தேனி சிறையில் அடைக்கப்பட்டார். பறிமுதல் செய்யப்பட்ட பாம்புகள் வனத்திற்குள் விடப்பட்டன. இந்த வழக்கில்  தொடர்புடைய, தலைமறைவான மேலும் சிலரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in