மதுவை கொடுத்து 20 முறைக்கு மேல் பாலியல் உறவு! 8ம் வகுப்பு மாணவனின் வாழ்க்கையை சீரழித்த ஆசிரியை
அமெரிக்காவில் பள்ளி ஒன்றில் மாணவரிடம் மதுவை கொடுத்து அத்துமீறிய பெண் ஆசிரியை ஒருவர் அவரிடம் பாலியல் ரீதியாக தொடர்பு வைத்துக் கொண்டுள்ள பகீர் சம்பவம் அரங்கேறியுள்ளது.
மாணவர்களின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் பெருங்கடமை ஆசிரியர்களுக்குத்தான் உள்ளது. அவர்கள் தான் மாணவர்களின் இரண்டாவது பெற்றோர்கள். அதனை உணர்ந்து அர்ப்பணிப்புடன் பணியாற்றும் ஆசிரியர்கள் தான் பெரும்பாலானவர்கள். ஆனால் மாணவர்களின் வாழ்க்கையை பாழாக்கிய சில மோசமான ஆசிரியர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அப்படியொரு ஆசிரியையின் செயலால் அமெரிக்காவில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவருடன் பாலியல் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நடுநிலைப்பள்ளி ஆசிரியராக பணிபுரிந்த பெண் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த 2015ல் இந்தச் சம்பவம் நடந்ததாகக் கூறப்படுகிறது.

31 வயதான மெலிசா மேரி கர்டிஸ், மாண்ட்கோமெரி என்ற நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது. அப்போது அந்த ஆசிரியருக்கு 22 வயது ஆகியிருந்தது. மறுபுறம் பாதிக்கப்பட்ட அந்த சிறுவனுக்கு வெறும் 14 வயது மட்டுமே ஆகியிருந்தது. அந்த மாணவர் 8ம் வகுப்பு படித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டில் ஜனவரி மற்றும் மே மாதம் வரை இந்தச் சம்பவம் நடந்துள்ளன. அந்த பெண் தனது கார் தொடங்கிப் பல இடங்களில் வைத்து மாணவரிடம் அத்துமீறி இருக்கிறார். அப்போது எட்டாம் வகுப்பில் படித்த அந்த மாணவருக்கு மது மற்றும் போதைப் பொருட்களைக் கொடுத்துள்ளார். இதைக்கொடுத்து மயங்கியபோது பெண் ஆசிரியர் அவருடன் உடலுறவில் ஈடுபட்டுள்ளார். 20 முறைக்கு மேல் இந்த அத்துமீறல் நடந்துள்ளது.
எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தச் சம்பவம் குறித்துப் பாதிக்கப்பட்ட அந்த நபர் புகார் அளித்த நிலையில், தற்போது போலீஸார் விசாரணையை ஆரம்பித்துள்ளனர். இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "அந்த நபர் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ளோம். கடந்த 2015ம் அந்த நபர் சிறுவனாக இருந்தபோது இந்த பாலியல் அத்துமீறல் தொடங்கியுள்ளது. அந்த சிறுவனிடம் இவர் தொடர்ச்சியாக பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும்" என்றனர்.
இதையடுத்து கடந்த அக்டோபர் 31ம் தேதி அந்த பெண்ணுக்கு எதிராகக் கைது செய்ய பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் மீது பாலியல் அத்துமீறல் உட்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் நேற்று முன்தினம் தானாக வந்து சரணடைந்தார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் மாணவர்களை நல்வழிப்படுத்தும் ஆசிரியரே இதுபோல நடந்தால் மாணவர்களின் நிலை என்னவாகும் என்று பலரும் கவலையடைந்துள்ளனர்.
இதையும் வாசிக்கலாமே...
வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஐயப்பனுக்கு தங்க அங்கி.. சபரிமலையில் இன்று நடை திறப்பு!
செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!