‘எங்கள் தண்ணீரை நீ எப்படி குடிக்கலாம்?’ : ஆசிரியரால் பட்டியலின மாணவிக்கு நடந்த கொடுமை

‘எங்கள் தண்ணீரை நீ எப்படி குடிக்கலாம்?’ : ஆசிரியரால் பட்டியலின மாணவிக்கு நடந்த கொடுமை

ஆசிரியர்களுக்கான குடத்தில் இருந்த தண்ணீரைக் குடித்ததற்காக பட்டியலின மாணவியை ஆசிரியர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலத்தின் மஹூபா மாவட்டத்தில் சிக்காரா என்ற கிராமத்தில் பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கும் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த மாணவி, பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்காக வைக்கப்பட்ட குடத்தில் தண்ணீர் குடிக்கச் சென்றுள்ளார். ஆனால், அதில் குடிநீர் இல்லை.

கடுமையான கோடை காலம் என்பதால், தண்ணீர் தவித்ததால், ஆசிரியர்களுக்கான குடத்தில் இருந்து தண்ணீரை எடுத்து அந்த மாணவி குடித்தார். இதைக் கண்ட பள்ளியில் பணியாற்றும் உதவி ஆசிரியர் கல்யாண்சிங், அந்த மாணவியைக் கடுமையாகத் தாக்கினார். பள்ளியில் நடந்த சம்பவத்தை மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர்கள், கிராம மக்களை அழைத்துக்கொண்டு பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். ஆனால், அவர்களையும் சாதி ரீதியாக தரைக்குறைவாக உதவி ஆசிரியர் கல்யாண்சிங் பேசியுள்ளார்.

இந்த குறித்த செய்தி பரவியதை அடுத்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்பட்டி, மஹூபா கூடுதல் அமர்வு மாஜிஸ்திரேட் ஜிதேந்திர சிங் உத்தரவு பிறப்பித்துள்ளார். "குடத்தில் கையை விட்டு தண்ணீரை எடுத்து குடித்ததற்காக திட்டினேன், மாணவியைத் தாக்கவில்லை" என உதவி ஆசிரியர் கல்யாண்சிங் கூறியுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in