பாலியல் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாணவி அதிரடி புகார்: போக்சோவில் ஆசிரியர் கைது!

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

பள்ளி மாணவிகளிடம் பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்தச் சென்ற அதிகாரிகளிடம் அப்பள்ளி ஆசிரியர் மீது மாணவிகள் பாலியல் புகார் கூறினர். இதையடுத்து அந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி கல்லணையில்  பெண்கள் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான மாணவிகள் பயின்று வருவதால் அவர்களுக்கு பாலியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அங்கு சென்று மாணவிகளுக்கு பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

அந்த நேரத்தில் அப்பள்ளியில் பயின்று வரும் ஒரு மாணவி,  அங்கு ஆசிரியராக பணியாற்றும் ஜோசப் செல்வின் என்பவர் மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக குற்றம் சாட்டி வாக்குமூலம் அளித்தார். இதைக் கேட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தச் சென்ற அதிகாரிகள் அதிர்ந்து போயினர்.

பாலியல் தொல்லை
பாலியல் தொல்லை

அந்த மாணவி கூறியதை  மற்ற மாணவிகளிடம் விசாரித்தபோது அவர்களும் இந்த குற்றச்சாட்டை உண்மை என்று கூறினர்.  இதனையடுத்து, உடனடியாக  வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், போக்சோ சட்டத்தின் கீழ் ஆசிரியர் ஜோசப் செல்வினை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பள்ளிக் கல்வித்துறை வட்டாரத்திலும் ஆசிரியர்கள் மத்தியிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in