டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும்! : உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

டாஸ்மாக் கடைகளை மூட நேரிடும்! : உயர் நீதிமன்றம் கடும் எச்சரிக்கை

மலை வாசஸ்தலங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள், கண்ணாடி பாட்டில்களைத் திரும்பப் பெறுவது தொடர்பான திட்டத்தை வகுக்காவிட்டால், அப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வனப்பகுதியில் பிளாஸ்டிக் பொருள்கள், மதுபாட்டில்கள் குவிந்து கிடப்பது தொடர்பாக இணையத்தில் வெளியான காணொலிக் காட்சி அடிப்படையில் எடுத்த வழக்கு, நீதிபதிகள் பாரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுபானங்களை வனப்பகுதிகளில் வீசிச் செல்வதால், அவற்றை விலங்குகள் மிதிக்கும் போது காயமடைவதாகவும், அடுத்த மூன்று மாதங்களில் அவை இறந்து விடுகின்றன என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இந்த கண்ணாடி பாட்டில்களை திரும்பப் பெறுவது தொடர்பாக 25-ம் தேதிக்குள் திட்டத்தை வகுக்கும்படியும், மாற்றுத் திட்டம் வகுக்கும்படியும் டாஸ்மாக் நிர்வாகத்துக்கு அறிவுறுத்திய நீதிபதிகள், தவறினால் மலைப்பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரித்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in