கூடுதல் பணம் கேட்பியா... டாஸ்மாக் ஊழியரின் முகத்தில் பாட்டில் குத்து; வாலிபர் ஆவேசம்

டாஸ்மாக்
டாஸ்மாக்

மதுபாட்டிலுக்கு கூடுதல் பணம் கேட்டு மிரட்டல் விடுத்த டாஸ்மாக் ஊழியர் மதுபாட்டிலால் தாக்கப்பட்ட சம்பவம் திருவள்ளூர் அருகே நடந்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்தவர் சபாபதி(48). இவர் புழல் கதிர்வேடு பாபுஜி நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் (கடை எண் 9189) விற்பனையாளராக பணியாற்றி வருகிறார். நேற்று இரவு மது போதையில் கடைக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணம் கொடுத்து மதுபாட்டு வாங்கியுள்ளார். அப்போது கடை ஊழியர் சபாபதி பாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர் இது குறித்து டாஸ்மாக் ஊழியர்களிடம் கேட்டுள்ளார். அப்போது டாஸ்மாக் ஊழியர் மிரட்டியதாக தெரிகிறது.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதனால் இவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதால் ஆத்திரமடைந்த அந்த நபர் பாட்டிலால் டாஸ்மாக் ஊழியர் முகத்தில் அடித்துவிட்டு கடையிலிருந்து நான்கு மதுபாட்டில்களை எடுத்துச் சென்றுள்ளார். இதில் காயமடைந்த டாஸ்மாக் ஊழியர் சபாபதி அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் இதுகுறித்து புழல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை வைத்து டாஸ்மாக் ஊழியரை தாக்கிவிட்டுச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.

டாஸ்மாக்
டாஸ்மாக்

இதேபோல் நேற்று பல்லாவரம் திருநீர்மலை அருகே உள்ள டாஸ்மாக் பாரில் மது பாட்டில்களை அதிக விலைக்கு விற்பனை செய்த பார் ஊழியர் நந்தகோபாலை இருவர் மதுபாட்டிலால் குத்திவிட்டு தப்பி ஓடிய சம்பவம் அரங்கேறியுள்ளது. டாஸ்மாக் கடைகளில் மதுபாட்டில்கள் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. இதை தடுக்கும் பொருட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் டாஸ்மாக் ஊழியர்கள் தொடர்ந்து மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருவது மது பிரியர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் மதுபாட்டிலுக்கு 10 அதிகமாக வாங்கிய டாஸ்மாக் ஊழியரை அடையாளம் தெரியாத நபர் தாக்கிய சம்பவம் டாஸ்மாக் ஊழியர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in