தாம்பரம் அடுத்த பதுவஞ்சேரி, பஞ்சாயத்து காலனியை சேர்ந்தவர் மணி, (55) இவரது இளைய மகன் சந்துரு(19). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர் கடந்த 18ம் தேதி இரவு, மது அருந்துவிட்டு வீட்டிற்கு வந்தார். இதைபார்த்த மணியின் மூத்த மகன் கார்த்திக், 32, என்பவர் தம்பியை தட்டி கேட்டுள்ளார். இதனால், அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதைபார்த்த தந்தை மணியும், இளைய மகன் குடித்துவிட்டு வந்ததை தட்டிகேட்டுள்ளார்,
அப்போது, ஆத்திரமடைந்த சந்துரு, தந்தையை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார் அதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. இதையடுத்து, மணியை, சேலையூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இதற்கிடையில், தந்தையை தாக்கிய மகனை, சேலையூர் போலீஸார் கைது செய்து, கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மணி, சிகிச்சை பலனின்றி, இன்று காலை உயிரிழந்தார். இதையடுத்து போலீஸார் சந்துரு மீது பதியப்பட்ட கொலை முயற்சி வழக்கை, கொலை வழக்காக மாற்றி பதிவு செய்தனர்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?