
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தி 22 பேரை படுகொலை செய்த ராபர்ட் கார்ட் என்ற என்ற நபர் சடலமாக மீட்கப்பட்டு இருப்பதாக போலீஸார் அறிவித்துள்ளனர்.
அமெரிக்காவின் மைனே மாகாணத்தில் கடந்த புதன்கிழமை இரவு லீவிஸ்டன் நகரில் உணவகம் மற்றும் கேளிக்கை விடுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினார். இந்த துப்பாக்கி சூட்டில் 22 பேர் உயிரிழந்ததோடு, பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தை சுற்றி வளைத்த பாதுகாப்பு அதிகாரிகள், சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு விசாரணையை தொடங்கினர். இதில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர் 40 வயதான ராபர்ட் கார்ட் என்பது தெரியவந்தது.
கையில் துப்பாக்கியுடன் ராபர்ட் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்ட போலீஸார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர். ராணுவத்தில் சில காலம் பணியாற்றிய ராபர்ட் கார்ட், மனநல பாதிப்பிற்காக சிகிச்சை பெற்று வந்ததாக போலீஸாரின் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் ராபர்ட் கார்ட், தலையில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு சடலமாக கிடந்ததை கண்டறிந்துள்ளதாக மைனே போலீஸார் அறிவித்துள்ளனர். ராபர்ட் கார்ட் எதற்காக இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டார் என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக மைனே மாகாண ஆளுநர் ஜேனட் மில்ஸ் தெரிவித்துள்ளார்.
இதையும் வாசிக்கலாமே...
இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?
வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!
அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!
தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!
கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!