‘அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆசிர்வாதம்’ வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தை அறிவித்தார் சுனிதா கேஜ்ரிவால்... கடுப்பில் பாஜக!

வீடியோ செய்தியில் சுனிதா கேஜ்ரிவால்
வீடியோ செய்தியில் சுனிதா கேஜ்ரிவால்

அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஆதரவான வாட்ஸ் ஆப் பிரச்சாரம் ஒன்றை, அவரது மனைவியான சுனிதா கேஜ்ரிவால் இன்று(மார்ச் 29) அறிவித்துள்ளார்.

டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி மதுபானக் கொள்கை வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். அமலாக்கத்துறை விசாரணையில் இருக்கும் அவருக்கு ஆதரவாக, வாட்ஸ் ஆப் பிரச்சாரம் ஒன்றினை கேஜ்ரிவால் மனைவி சுனிதா கேஜ்ரிவால் அறிவித்திருக்கிறார். தேர்தல் நெருக்கத்தில் ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இந்த பிரச்சாரம் மாறக்கூடும் என்பதால் பாஜக கடுகடுப்போடு இந்த நகர்வுகளை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

'கேஜ்ரிவால் -கோ- ஆஷிர்வாத்' என்ற தலைப்பிலான வாட்ஸ்ஆப் பிரச்சாரத்தை, ஒரு வீடியோ செய்தியின் வாயிலாக சுனிதா கேஜ்ரிவால் இன்று அறிவித்தார். சிறையில் வாடும் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு பொதுமக்கள் தங்கள் கனிவான வார்த்தைகள் மூலமாக வாழ்த்தலாம் என அதற்கான பிரத்யேக எண்ணையும் பகிர்ந்துள்ளார். "‘கெஜ்ரிவால் கோ ஆஷிர்வாத்’ என்றொரு இயக்கத்தை நாங்கள் இன்று முதல் தொடங்குகிறோம். இந்த வாட்ஸ்ஆப் எண்ணில் உங்கள் ஆசிகளையும் பிரார்த்தனைகளையும் கேஜ்ரிவாலுக்கு நீங்கள் தெரிவிக்கலாம்”என்று சுனிதா கேஜ்ரிவால் அந்த வீடியோ செய்தியில் தெரிவித்திருக்கிறார்.

நேற்றைய தினம் டெல்லியின் ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் கேஜ்ரிவால் ஆஜரானதில், அவருக்கான அமலாக்கத்துறை காவல் ஏப்ரல் 1 வரை நீட்டித்து உத்தரவானது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய சுனிதா கேஜ்ரிவால், “அவருக்கு உடல்நிலை சரியில்லை. அவரது சர்க்கரை அளவு கடும் ஏற்றஇறக்கத்தை கண்டுள்ளது. அமலாக்கத்துறை விசாரணையில் அவர் மிகவும் துன்புறுத்தப்படுகிறார். இந்த கொடுங்கோன்மை நீடிக்காது. மக்கள் நிச்சயம் பதிலடி கொடுப்பார்கள்” என்று சீறினார்.

அர்விந்த் கேஜ்ரிவால்
அர்விந்த் கேஜ்ரிவால்

கோர்ட் விசாரணையின் போது பேசிய கேஜ்ரிவால், ’ஆம் ஆத்மி கட்சியை நசுக்கும் நோக்கத்தில் அமலாக்கத்துறை செயல்படுவதாக’ குற்றம் சாட்டினார். "நீங்கள் விரும்பும் வரை என்னை ரிமாண்டில் வைத்திருக்கலாம். விசாரணைக்கு நான் தயாராகவே இருக்கிறேன். இதுவரை, இந்த வழக்கில் சிபிஐ 31,000 பக்கங்களில் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது; 294 சாட்சிகளை விசாரித்தது. அமலாக்கத்துறை இதுவரை 162 பேரை விசாரித்து 25,000 பக்க அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த ஆவணங்கள் மற்றும் அறிக்கைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்துப் பார்த்தாலும், அவற்றில் என் பெயர் நான்கு இடங்களில் மட்டுமே வருகிறது. அப்படி இருக்கையில் என் மீதான கைது நடவடிக்கை ஏன்?” என்று கேஜ்ரிவால் கேள்வி எழுப்பினார்.

இதனிடையே அமலாக்கத்துறை விசாரணை மற்றும் காவலில் இருக்கும் கேஜ்ரிவாலுக்கு ஆதரவான வாட்ஸ்ஆப் பிரச்சார இயக்கத்தை பாஜக பதைபதைப்புடன் பார்க்கிறது. கேஜ்ரிவால் கைது மூலமாக அவருக்கு ஆதரவான அனுதாப அலை அதிகரிக்கும் என முன்னதாக சுனிதா தெரிவித்திருந்த நிலையில், புதிய வாட்ஸ்ஆப் பிரச்சாரம் அதற்கு வழி செய்யுமா என்றும் பாஜக உற்று கவனித்து வருகிறது. அவசியமெனில் ஆம் ஆத்மிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிப்பது குறித்தும் பாஜக ஆலோசித்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...    

வரலாற்றில் உச்சம்... ரூ.51,000யைக் கடந்தது சவரன் விலை... ஒரே நாளில் ரூ.1,120 உயர்வு!

தேவாலய ஆராதனைக்குச் சென்றபோது ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து... 45 பேர் பலியான பரிதாபம்!

அதிர்ச்சி... சென்னை தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்!

பள்ளி இறுதித்தேர்வு தேதியில் திடீர் மாற்றம்... ரமலான் பண்டிகையை முன்னிட்டு நடவடிக்கை!

அடுத்த தோனி இவர் தான்... தோனியே புகழ்ந்த அந்த நபர் இவரா?

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in