பள்ளி வாகனம் மோதி பலியான சிறப்பு எஸ்ஐ; மதுரையில் பரிதாபம்!

சிறப்பு எஸ்.ஐ செல்லப்பாண்டி
சிறப்பு எஸ்.ஐ செல்லப்பாண்டி

மதுரையில் நேற்று முன்தினம் பள்ளி வாகனம் மோதியதில் கால் துண்டாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட சிறப்பு எஸ்.ஐ, சிகிச்சை பலனின்றி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

விபத்தில் எஸ்.ஐ பலி
விபத்தில் எஸ்.ஐ பலி

திண்டுக்கல் மாவட்டம் குற்றப்பிரிவு சிறப்பு சார்பு ஆய்வாளராக பணியாற்றுபவர் செல்லப்பாண்டி. நேற்று முன்தினம் காலை பணி முடித்துவிட்டு சொந்த ஊரான விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணற்றுக்கு பெற்றோரை பார்ப்பதற்காக டூவீலரில் சென்றுள்ளார்.

துவரிமான் 4 வழிச்சாலை சந்திப்பில் செல்லப்பாண்டி வந்த போது, மதுரையில் இருந்து கீழமாத்தூர் செல்ல முயன்ற தனியார் பள்ளி பேருந்து டூவீலர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட செல்லப்பாண்டியின் கணுக்கால் துண்டான நிலையில் மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் சிறப்பு எஸ்.ஐ செல்லப்பாண்டி சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து நாகமலை புதுக்கோட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். பெற்றோரை பார்க்க சென்ற சிறப்பு எஸ்.ஐ பேருந்து மோதி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in