படித்துக் கொண்டிருந்த தாய்... போதையில் தூங்கிய தந்தை: பூங்காவிற்கு சென்ற சிறுமிக்கு மாணவனால் நடந்த துயரம்

படித்துக் கொண்டிருந்த தாய்... போதையில் தூங்கிய தந்தை: பூங்காவிற்கு சென்ற சிறுமிக்கு மாணவனால் நடந்த துயரம்

பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த நான்கு வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் ஆசை வார்த்தை காட்டி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை சம்பவம் காஞ்சிபுரம் பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் அனிதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேற்று இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கணவரும் அப்போது வீட்டிலிருந்துள்ளார். இதையடுத்து 4 வயதுக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் தெரிவித்துள்ளார். போதையிலிருந்த கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். பூங்காவில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் போதையிலிருந்த தந்தை ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட்டார். இதை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கவனித்துள்ளான். பிறகு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை காட்டி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். இதையடுத்து சிறுமியைப் பெற்றோர்கள் தேடத் தொடங்கியிருக்கிறார்கள். ஒரு வழியாக அழுகை குரலைக் கேட்டு சிறுமியைக் கண்டுபிடித்த பெற்றோர் அவளின் நிலையைக் கண்டு கதறினார்கள். சிறுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கிருந்தவர்கள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது. அந்த மாணவன் கடந்த பிப்ரவரி மாதத்தில் மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாணவன் படிக்கும் தனியார் பள்ளி நிர்வாகமும் இதை வெளியில் வராமல் பிரச்சினையை மூடிமறைத்துவிட்டது. தற்போது பள்ளி மாணவன் தலைமறைவாகியுள்ள நிலையில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு அந்த மாணவனைத் தேடிவருகிறார்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in