ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி: மாணவனுக்கு நடந்த விபரீதம்

ரயில் என்ஜின் மீது ஏறி செல்ஃபி: மாணவனுக்கு நடந்த விபரீதம்

ரயில் மீது ஏறி செல்ஃபி எடுக்க முயன்ற பள்ளி மாணவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.

மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர் சுஹைல் மன்சூரி. பள்ளி மாணவரான இவர் தனது நண்பர்கள் சிலருடன் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையத்திற்கு இன்று வந்தார். அப்போது திடீரெdன அங்கிருந்த ரயில் என்ஜின் மீது மன்சூரி ஏறியுள்ளார்.

இதைப்பார்த்த பொதுமக்கள் அவரை கீழே இறங்கி வருமாறு எச்சரித்துள்ளனர். ஆனால் அதைக் கேட்காமல் அவர் என்ஜின் மீது ஏறி தனது செல்போனில் இருந்து செல்ஃபி எடுக்க முயன்றார். அப்போது தவறுதலாக அவரது கை, ரயிலுக்கு மேற்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின் கம்பி மீது பட்டது. இதனால் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே மன்சூரி உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் ரயில் நிலையத்தை அடித்து நொறுக்கினர். அங்கு வந்த ரயில்வே போலீஸார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் மன்சூரி உடலை மீட்ட போலீஸார், மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories

No stories found.