கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் மாணவன்; கார் டிக்கியை திறந்து பார்த்த போலீஸார் அதிர்ச்சி!
உத்தரபிரதேசத்தில் வாகன சோதனையின்போது கார் டிக்கியில் அடைத்து கடத்தப்பட்ட கல்லூரி மாணவரை போலீஸார் மீட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் ஆக்ரா நகரில் டக்கால் லேக் பகுதியில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனையிட்டபோது, அதன் டிக்கியில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் வாலிபர் ஒருவர் கிடந்துள்ளார். இதனால் உஷாரான போலீஸார் உடனடியாக காரில் இருந்த இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் கார் டிக்கியில் கிடந்தவர் இஷாந்த் அகர்வால் (19) என்பதும், அவர் புனே நகரில் உள்ள கல்லூரியில் பிபிஏ இரண்டாம் ஆண்டு படித்து வருபவர் என்பதும் தெரியவந்தது. தொடர் விசாரணையில், தசரா விடுமுறைக்காக சொந்த ஊருக்கு திரும்பிய இஷாந்த், நொய்டாவில் உள்ள சகோதரி வீட்டுக்கு கார் ஒன்றில் பயணித்துள்ளார். அப்போது பெட்ரோல் போட ஓட்டுநர் காரை நிறுத்திய நிலையில், மற்றொரு காரில் வந்த இரண்டு பேர் மாணவரை கடத்தி சென்றுள்ளனர்.

மாணவரின் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்ததை அடுத்து, அவரது பெற்றோர் அளித்த புகார் பேரில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் வாகன சோதனையின் போது இஷாந்த் மீட்கப்பட்டுள்ள நிலையில் கடத்தலில் ஈடுபட்ட இருவர் உட்பட கடத்தலுக்கு திட்டம் தீட்டிய இஷாந்தின் கார் ஓட்டுநர் உட்பட மூவரை கைது செய்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் வாசிக்கலாமே...
குட்நியூஸ்... பாதுகாப்பான நகரங்களில் சென்னைக்கு முதலிடம்! உலக அளவில் எத்தனையாவது இடம் தெரியுமா?
நெகிழ்ச்சி... மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்கு சிலை வைத்த ரசிகர்கள்!
பாலின சமத்துவம்... பெண்கள் வேலைநிறுத்தம்... ஆதரவு தெரிவித்து பிரதமர் பணி புறக்கணிப்பு!
ராஜராஜ சோழனின் 1038வது சதய விழா... தஞ்சை பெருவுடையாருக்கு 48 பேரபிஷேகம்!
பிக் பாஸ்7: வைல்ட் கார்டில் நுழையும் அந்த ஐந்து போட்டியாளர்கள் இவர்கள்தானா?