பகீர் சம்பவம்: காவல் துறை அதிகாரியை 300 மீட்டர் காரில் இழுத்துச் சென்ற மாணவன்!

ஜோஷியை இழுத்துச் சென்ற கார்.
ஜோஷியை இழுத்துச் சென்ற கார்.

சோதனைச் சாவடியில் பணியில் இருந்த காவல் துறை அதிகாரியை மோதி காரில் 300 மீட்டர் துரத்திற்கு இழுத்துச் சென்ற பிளஸ் 2 மாணவன் கைது செய்யப்பட்ட சம்பவம் சூரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம், சூரத் நகரின் அல்காபுரி பாலத்தின் கீழ் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஒரு கார் பதிவு எண் இல்லாமல் வந்தது. அந்த காரை காவல் துறை அதிகாரி லோக் ரஷாக் கௌதம் ஜோஷி நிறுத்தச் சொன்னார். ஆனால், அந்த காரில் இருந்த வாலிபர், காவல் அதிகாரி ஜோஷியை மோதுவது போல காரை ஓட்டி வந்துள்ளார். இதனால் பானட்டில் தாவி ஜோஷி உயிர் தப்பினார்.

ஆனாலும், அவருடன் காரை 300 மீட்டர் தூரத்திற்கு கார் ஓட்டுநர் இழுத்துச் சென்றார். இதனால் காரில் இழுந்து காவல் அதிகாரி ஜோஷி கீழே விழுந்து காயமடைந்தார். இதையடுத்து அங்கிருந்த போலீஸார், ஜோஷியை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

கைது
கைது

இதையடுத்து காவல் அதிகாரி மீது மோதி இழுத்துச் சென்ற கார் குறித்து போலீஸார் விசாரணை நடத்தினர். அப்போது காரை ஓட்டிச் சென்ற வாலிபர் ஹேம்ராஜ் பதியா(19) என்பது தெரிய வந்தது. பிளஸ் 2 படிக்கும் அவரை கரித்காமில் உள்ள இலா பூங்காவில் உள்ள இல்லத்தில் போலீஸார் கைது செய்தனர்.

அவர் மீது கொலை முயற்சி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல் மற்றும் மோட்டார் வாகனச் சட்டத்தை மீறியதாக வழக்குப் பதிவு செய்தனர். இந்த சம்பவம் சூரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in