நீட் தேர்வில் 2வது முறையும் குறைவான மதிப்பெண்: மாணவரின் பரிதாப முடிவு

நீட் தேர்வில் 2வது முறையும் குறைவான மதிப்பெண்: மாணவரின் பரிதாப முடிவு

கோவில்பட்டியில் நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா தெருவைச் சேர்ந்தவர் மனோ நாராயணன்(20) இவர் நீட் தேர்விற்கு கோவில்பட்டியில் தனியார் கோச்சிங் சென்டரில் படித்துவந்தார். இவர் இதற்கு முன்பு ஏற்கனவே ஒருமுறை நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெறவில்லை. இந்நிலையில் இரண்டாவது முறையாக நீட் தேர்வு எழுதினார். அதிலும் மதிப்பெண் குறைந்துள்ளது. இதனால் அதிக மன உளைச்சலில் இருந்த மனோ நாராயணன் நேற்று மாலை விஷம் குடித்தார். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மனோ நாராயணனை கோவில்பட்டி தனியார் மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்தனர்.

தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மனோ நாராயணனை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சைப் பலனின்றி நேற்று நள்ளிரவு மனோ நாராயணன் உயிர் இழந்தார். மாணவனின் மரணம் தொடர்பாக கோவில்பட்டி மேற்கு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நீட் தேர்வில் மதிப்பெண் குறைந்ததால் மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in