சென்னையில் அதிர்ச்சி... தாயிடமிருந்த கைக்குழந்தையை கடித்துக் குதறிய தெருநாய்!

ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்
ஒன்றரை வயது குழந்தையை கடித்து குதறிய வெறிநாய்

சென்னை அடுத்த திருவொற்றியூரில் தெருவில் சுற்றித்திரிந்த நாய் ஒன்று, தாயின் கையில் இருந்த ஒன்றரை வயது குழந்தையை கடித்துக்குதறி, முகத்தை சேதப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவொற்றியூர் பெரியார் நகர், விவேகானந்தர் தெருவில் வசித்து வரும் தேவி என்பவர் தனது ஒன்றரை வயது குழந்தையை தூக்கிக்கொண்டு வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த தெருநாய் ஒன்று திடீரென குழந்தை மீது பாய்ந்து, குழந்தையின் முகத்தில் கடித்துக்குதறி உள்ளது. நாயிடமிருந்து குழந்தையை காப்பாற்ற வந்த தாத்தாவையும் நாய் கடித்துள்ளது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் விரட்டியதால், அங்கிருந்து தப்பி ஓடிய நாய், அதே தெருவில் மேலும் 4 பேரை கடித்து குதறியது.

சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு
சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரிப்பு

இதையடுத்து காயமடைந்த குழந்தை உட்பட அனைவரும் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட தெரு நாய்கள் சுற்றித் திரிவதாகவும், இவை கடித்து விடுமோ என்ற அச்சத்திலேயே நடமாட வேண்டிய அவல நிலை இருப்பதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை
தெருநாய்களை பிடிக்க மக்கள் கோரிக்கை

இது தொடர்பாக பலமுறை மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும், ஊழியர்கள் நாய்களைப் பிடித்து சென்று விட்டு, பின்னர் மீண்டும் அதே பகுதியில் விட்டு விடுவதாக மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே தெரு நாய்களின் தொல்லையை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் வாசிக்கலாமே...

இன்று சந்திர கிரகணம்... 8 மணி நேரம் தோஷம்... இரவு சாப்பிடக் கூடாதா?

வரலாற்று சாதனை... ஆசிய பாரா விளையாட்டு போட்டிகளில் 100 பதக்கங்களை வென்றது இந்தியா!

அதிர்ச்சி... கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை; சிக்கியது கடிதம்!

தீபாவளி பண்டிகைக்கு 10,975 சிறப்புப் பேருந்துகள்...நவம்பர் 9 முதல் இயக்கப்படுகிறது!

கெளதம் மேனனுடன் குத்தாட்டம் போட்ட கீர்த்தி சுரேஷ்... வைரலாகும் வீடியோ!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in