அதிர்ச்சி; மத்தியப் பிரதேச சட்டப்பேரவை தேர்தலில் பயங்கர வன்முறை: போலீஸார் குவிப்பு!

வாக்குச்சாவடி முன்பு நடைபெற்ற மோதல்
வாக்குச்சாவடி முன்பு நடைபெற்ற மோதல்

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவின்போது இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதலில் ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக்கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள 230 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பெரும்பாலான இடங்களில் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் மோரீனா மாவட்டத்தில் உள்ள திமானி சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட மிர்கான் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள 147, 148 ஆகிய வாக்குச்சாவடிகளில் இரு பிரிவினருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. ஒரு கட்டத்தில் மோதல் வன்முறையாக மாறிய நிலையில், ஒருவர் மீது ஒருவர் கல்வீசி தாக்கிக் கொண்டனர்.

மோரீனா மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அருகே கல்வீசி தாக்குதல்
மோரீனா மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் அருகே கல்வீசி தாக்குதல்

இதில் ஒருவர் படுகாயம் அடைந்தார். பாதுகாப்பிற்காக நின்றிருந்த போலீஸார் மற்றும் அங்கு விரைந்த பாதுகாப்பு படையினர், நிலைமையை உடனடியாக கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதற்காக தடியடி நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு மீண்டும் அமைதியாக நடைபெற்று வருகிறது.

வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள்.
வாக்களிக்க வரிசையில் நின்ற மக்கள்.

மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் 42,000 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், சுமார் 700 கம்பெனி மத்திய போலீஸ் படையினர் மற்றும் 2 லட்சம் காவல் துறையினர் பாதுகாப்பிற்காக களமிறக்கப்பட்டுள்ளனர்.

5.59 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ள நிலையில், களத்தில் 2,500-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் உள்ளனர். கடந்த 18 ஆண்டுகளாக பாஜக ஆட்சியில் இருந்து வரும் மத்தியப் பிரதேசத்தில், இந்தமுறை ஆட்சியைப் பிடிக்க காங்கிரஸ் கடுமையாகப் போராடி வருவது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in