தூக்கத்திலேயே தந்தையை குத்திக் கொன்ற வளர்ப்பு மகள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்

தூக்கத்திலேயே தந்தையை குத்திக் கொன்ற வளர்ப்பு மகள்: விசாரணையில் அதிர்ச்சி தகவல்
கொலையுண்ட கிருஷ்ணாராம்

வெறுத்து ஒதுக்கிய தந்தையை ஆள் வைத்து கொலை செய்த வளர்ப்பு மகள் உள்ளிட்ட 3 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

மதுரை சின்ன சொக்கிகுளம் கமலா இரண்டாவது தெருவைச் சேர்ந்த கிருஷ்ணாராம் - பங்கஜவள்ளி தம்பதியினர், தங்களது வளர்ப்பு மகளான நிவேதாவுடன் வசித்து வந்தனர். மகள் நிவேதா காரைக்குடி அருகேயுள்ள மானகிரி பகுதியைச் சேர்ந்த ஹரிகரன் என்பவரைக் காதலித்து திருமணம் செய்துள்ளார்.

இதனையடுத்து, நிவேதாவின் தந்தை கிருஷ்ணாராம் தனது வீட்டின் அருகிலேயே ஜூஸ் கடை ஒன்றை வைத்துக்கொடுத்து ஹரிகரனுக்கு உதவியுள்ளார். ஆனால், இருவரும் கடையை சரிவர கவனிக்காத நிலையில், கடந்த மாதம் 30-ம் தேதியன்று தந்தை கிருஷ்ணராம் இருவரையும் திட்டியுள்ளார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் கிருஷ்ணாராமைத் தாக்கி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.

இந்நிலையில், நேற்று காலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த கிருஷ்ணாராம் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனையடுத்து மனைவி பங்கஜவள்ளி அளித்த புகாரின் பேரில் தல்லாகுளம் சரக உதவி ஆணையர் சுரேஷ்குமார் தலைமையிலான காவல் துறையினர் கொலை வழக்காக பதிவு செய்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், நிவேதா அவரது கணவர் மற்றும் கணவரின் நண்பர் சுரேஷ் ஆகியோருடன் நேற்று காலை கிருஷ்ணாராமின் வீட்டிற்கு வந்து மேல் அறையில் தூங்கிக் கொண்டிருந்த கிருஷ்ணாராமைக் கத்தியால் கழுத்து பகுதியில் குத்தி கொலை செய்துவிட்டு வீட்டிலிருந்த தங்க நகைகளை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து நிவேதா, ஹரிகரன், சுரேஷ் ஆகிய 3 பேரையும் தல்லாகுளம் காவல் துறையினர் கைது செய்து அவர்களிடமிருந்து 20 பவுன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். தந்தையை வளர்ப்பு மகள் படுகொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.