இந்தியாவில் 3 நிமிடங்களுக்கு 1 விபத்து மரணம்... அதிர்ச்சியூட்டும் புள்ளி விவரம்!

சாலை விபத்து
சாலை விபத்து

இந்தியாவில் கடந்த ஆண்டு நடந்த சாலை விபத்துக்களில் சராசரியாக 3 நிமிடங்களுக்கு ஒருவர் பலியான விவரம் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஏற்படும் சாலை விபத்துகள், இறப்புகள் மற்றும் காயங்கள் பற்றிய தரவுகளை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருகின்றது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டுக்கான விபத்து பற்றிய விவரங்களை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிபரத்தில், 2022-ல் இந்தியாவில் சாலை விபத்துகளில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1.68 லட்சத்தைத் தாண்டியுள்ளன. நாளொன்றுக்கு சுமார் 462 பேர் என ஒவ்வொரு மூன்று நிமிடங்களுக்கும் ஒருவர்  சாலை விபத்தில் இறப்பதாகவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

விபத்து
விபத்து

2023-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் நிகழும் விபத்துகள் பாதியாகக் குறைக்கவேண்டும் என்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும், சாலை விபத்துகளால் தொடர்ந்து இறப்புகள் அதிகரிப்பது கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது. கடந்த 2021-ஆண்டோடு ஒப்பிடும்போது 2022-ல் இறப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 9 சதவீதம் அதிகரித்துள்ளது. 2019-ல் தொற்றுநோய்க்கு முந்தைய ஆண்டில் சுமார் 11.5 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

ஹெச்.சி.எல் நிறுவனத்தில் 10,000 பேருக்கு வேலை வாய்ப்பு! மாணவர்கள் உற்சாகம்!

திருப்பதியில் பேத்தியுடன், துர்கா ஸ்டாலின் தரிசனம்!

கடும் போக்குவரத்து நெரிசல்... படப்பிடிப்புக்கு மெட்ரோவில் பயணித்த பிரபல நடிகர்!

அதிர்ச்சி... தந்தை பெரியார் திராவிடர் கழக நிர்வாகிக்கு சரமாரி வெட்டு!

நான் ஹெல்மெட் திருடவில்லை; உயிரை மாய்த்துக்கொள்வேன்... சிறப்பு எஸ்ஐ கதறல்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in