துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை... சச்சின் டெண்டுல்கரின் பாதுகாவலர் எடுத்த பரிதாப முடிவு

துப்பாக்கியால் சுட்டு சச்சின் காவலர் தற்கொலை
துப்பாக்கியால் சுட்டு சச்சின் காவலர் தற்கொலை
Updated on
1 min read

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்த எஸ்ஆர்பிஎப் வீரர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று நாடு முழுவதும் பயணம் மேற்கொண்டு வருகிறார். விளையாட்டில் ஆர்வமுள்ள இளம் வீரர்களை சந்தித்து ஊக்கமளித்து வருகிறார். அப்போது எடுக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை தன்னுடைய சமூகவலைதள பக்கங்களில் பதிவிட்டு வருகிறார். அவருடையை பாதுகாப்புக்காக மாநில ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

சச்சின் டெண்டுல்கர்.
சச்சின் டெண்டுல்கர்.

சச்சின் டெண்டுல்கரின் பாதுகாப்பு பணியில் எஸ்ஆர்பிஎப் வீரர் பிரகாஷ் கப்டேவும் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் சில நாட்கள் விடுமுறை எடுத்துக்கொண்டு தனது சொந்த ஊரான மகாராஷ்டிரா மாநிலம் ஜாம்நர் நகருக்குச் சென்றிருந்தார். அப்போது யாரிடமும் பேசாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இதுகுறித்து உறவினர்கள் கேட்டபோது, எந்த பதிலும் சொல்லாமல் இருந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனக்கு எஸ்ஆர்பிஎப்-ல் வழங்கப்பட்டு இருந்த துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார்.

சச்சின் உடன் பிரகாஷ்
சச்சின் உடன் பிரகாஷ்

இந்த தற்கொலை சம்பவம் குடும்பத்தினர் மற்றும் சக எஸ்ஆர்பிஎப் வீரர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரகாஷ் கப்டேவுக்கு மனைவி, 2 குழந்தைகள், வயதான பெற்றோர் உள்ளனர். இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். குடும்ப வாழ்க்கையால் பிரச்சினையா அல்லது பணியில் உயர் அதிகாரிகளின் டார்ச்சரா என்பன உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in