‘லவ் ஜிஹாத், செக்ஸ் டார்ச்சர்...’ ட்விட்டரில் முறையிட்ட இளம்பெண்; அதிரடி காட்டிய போலீஸார்!

லவ் ஜிஹாத் புகார்
லவ் ஜிஹாத் புகார்

ட்விட்டர் வாயிலாக லவ் ஜிஹாத் புகார் எழுப்பிய பெண்ணுக்கு கர்நாடக போலீஸார் விரைந்து உதவிக்கரம் நீட்டியதோடு, குற்றம் சாட்டப்பட்ட நபரை காஷ்மீருக்கு பறந்து சென்று கைது செய்திருக்கின்றனர்.

சில தினங்களுக்கு முன்னர் பெங்களூரு ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் ஒருவர் ட்விட்டர் (தற்போது எக்ஸ் தளம்) வாயிலாக பகிரங்க புகார் ஒன்றை பதிவு செய்திருந்தார். அதில், ”நான் லவ் ஜிஹாத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன். மேலும் பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான பாலுறவு மற்றும் பலவந்த மத மாற்றம் ஆகியவற்றாலும் துன்புறுகிறேன். எனது உயிருக்கு ஆபத்து நேரிட்டுள்ளதால், உடனடியாக பெங்களூரு காவல்துறை உதவியை வழங்கவும்” என்று கோரிக்கை வைத்திருந்தார்.

கைது
கைது

அந்த பதிவில் கர்நாடக காவல்துறை டிஜிபி, பெங்களூரு போலீஸ், பெங்களூரு குற்றப்பிரிவு போலீஸார் மற்றும் பிரதமரின் அலுவலகம் ஆகியோரை ட்விட்டரில் இணைத்திருந்தார். இதனால் அந்த பதிவு உடனடியாக பெங்களூரு போலீஸார் கவனத்துக்கு வந்தது. ஹெப்பக்கோடி காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து, செப்.14 அன்று விசாரணையை தொடங்கினர்.

பாலியல் பலாத்காரம், இயற்கைக்கு மாறான பாலுறவு, ஏமாற்றுதல் மற்றும் மதச் சுதந்திரத்திற்கான கர்நாடகா பாதுகாப்புச் சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். மேலும் பெண்ணால் குற்றம் சாட்டப்பட்ட மொகில் அஷ்ரப் பெய்க் என்ற நபரைத் தேடி காஷ்மீரின் ஸ்ரீநகருக்கு பெங்களூரு போலீஸார் பறந்தனர். அங்கு அவரை கைது செய்து நேற்று பெங்களூருக்கு அழைத்து வந்தனர்.

அஷ்ரப்
அஷ்ரப்

ஸ்ரீநகரை சேர்ந்த அஷ்ரப் பெங்களூரு ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருகிறார். உடன் பணியாற்றும் மாற்று மதத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து, லிவ் இன் முறையில் சேர்ந்து வாழ்ந்து வந்தார். பாதிக்கப்பட்ட பெண்ணின் புகார் அடிப்படையில், இஸ்லாம் மதத்துக்கு மதம் மாற வற்புறுத்தி இயற்கைக்கு மாறான முறையில் பாலியல் சித்ரவதை செய்திருக்கிறார்.

திருமண உறுதிமொழியின் அடிப்படையில் பாலியல் உறவை தொடர்ந்த அஷ்ரப், வருடக்கணக்கில் திருமணம் செய்யாது ஏமாற்றி உள்ளார். பாதிக்கப்பட்ட பெண் ட்விட்டர் வாயிலாக போலீஸ் உதவியை நாடியதும் ஸ்ரீநகருக்கு பறந்திருக்கிறார். அஷ்ரப்பை கைது செய்த போலீஸார், அவரால் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் குறித்தும், அதன் உண்மைத் தன்மை குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in