தமிழக மீனவர்கள் 22 பேர் கைது! படகுகள் பறிமுதல்... தொடர்ந்து அத்துமீறும் இலங்கை

தமிழக மீனவர்கள் 22 பேர் கைது! படகுகள் பறிமுதல்... தொடர்ந்து அத்துமீறும் இலங்கை

எல்லைத்தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 22 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்து அவர்களிடம் இருந்து 2 விசை படகுகளையும் பறிமுதல் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான கடல் எல்லை மிகவும் குறுகியது. தமிழகக் கடற்கரையிலிருந்து குறிப்பிட்ட தொலைவு சென்றால் தான் மீன்கள் கிடைக்கும். அவ்வாறு மீன்கள் கிடைக்கும் பகுதிகள் அனைத்தும் தமிழக மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் பகுதிகள் ஆகும். அங்கு சென்று மீன்பிடிக்க தமிழக மீனவர்களுக்கு உரிமை உள்ளது. அதை மதிக்காமல் தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்து சித்ரவதை செய்வதும் பின் மத்திய- மாநில அரசுகளின் அழுத்தத்தால் விடுப்பதும் வாடிக்கையாகி வருகிறது.

இந்த நிலையில் பருத்தித்துறை கடற்பகுதியில் தமிழகத்தை சேர்ந்த மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கே வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி அங்கிருந்த 22 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்கள் வைத்திருந்த 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட அனைவரையும் யாழ்ப்பாணம் மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளது மீனவர்கள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...


நடிகர் கமல் பன்றியை வளர்கிறார்... பிரபல பாடகி ஆவேசம்!

சத்தமில்லாமல் நடந்த மகனின் பட பூஜை... கண்டுகொள்ளாத விஜய்!

பகீர் வீடியோ... 40 தொழிலாளர்களின் உயிர் போராட்டம்... மீட்பு பணிகள் நிறுத்தி வைப்பு!

நாளை உலகக் கோப்பை பைனல்... லட்சங்களில் எகிறிய தங்கும் விடுதி வாடகை!

பரபரப்பு... காங்கிரஸ் வேட்பாளருக்கு விழுந்த செருப்படி!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in