கத்தி முனையில் கொள்ளை... இந்திய மீனவர்கள் மீது தாக்குதல்... இலங்கை கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்!

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்
Updated on
2 min read

வங்கக் கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த நாகை மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தி,  வலைகளை அறுத்து, ஜிபிஎஸ் கருவி, செல்போன்களை கொள்ளையடித்துச் சென்றுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்

இந்திய எல்லையில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்துவது வாடிக்கையாகி வருகிறது. புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மீது  தாக்குதல் நடத்தி சில தினங்களேயான நிலையில் தற்போது நாகை மாவட்ட மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நாகை மாவட்டம் செருதூர் கிராமத்தை சேர்ந்த சபாபதி என்பவரது விசைப்படகில் அவருடைய மகன்கள் பிரதீப், பிரகாஷ் உள்ளிட்ட 4 பேர் கடந்த 21-ம் தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். நேற்று இரவு 8 மணிக்கு கோடியக்கரை தென்கிழக்கே 10 நாட்டிக்கல் கடல் மைல் தொலைவில் அவர்கள் மீன்பிடித்து கொண்டிருந்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்

அப்போது இந்திய எல்லைக்குள் அத்துமீறி அதிவேகமாக 2 படகில் புகுந்த இலங்கை கடற்கொள்ளையர்கள், நாகை மீனவர்களிடம் கத்தி முனையில் மீன்கள் மற்றும் தளவாடப் பொருட்களை கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது மீனவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயன்றபோது  ஆயுதங்களுடன் தமிழக மீனவர்களின் படகில் பாய்ந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளனர். 

பின்னர் கத்தி முனையில் தமிழக மீனவர்களின் 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 500 கிலோ வலை, 30 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், ஜிபிஎஸ் கருவி , 4 செல்போன்களைப் பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். அவர்களின் தாக்குதலில்  படுகாயம்  அடைந்த மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்பினர். 

தாக்குதலுக்கு உள்ளான மீனவர்
தாக்குதலுக்கு உள்ளான மீனவர்

செருதூர் மீன் இறங்குதளத்திற்கு வந்த மீனவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் சக மீனவர்கள் நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இந்திய கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்துவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தொழில் செய்ய முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் , மத்தியு, மாநில அரசுகள் இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாகை மாவட்ட மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in