பாகிஸ்தானுக்கு உளவு; மாஸ்கோ இந்திய தூதரகத்தில் பணியாற்றிய உ.பி நபர் கைது!

பாகிஸ்தானுக்கு உளவு; மாஸ்கோ இந்திய தூதரகத்தில் பணியாற்றிய உ.பி நபர் கைது!

மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பணியாற்றிய அதிகாரி உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த ஒருவர் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ அமைப்புக்காக உளவு பார்த்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள இந்திய தூதரகத்தில் பாதுகாப்பு உதவியாளராக பணியாற்றி வரும் உ.பி. மாநிலம் ஹாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யேந்திர ஜெயின் என்பவர் பாகிஸ்தான் உளவாளியாக செயல்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.

கைது
கைது

அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியதில் இந்திய தூதரகம், பாதுகாப்பு அமைச்சகம், வெளியுறவு அமைச்சகம் தொடர்பான ரகசிய தகவல்களை இவர் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு கொடுத்ததும் தெரியவந்தது. சத்யேந்திர சிவலை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். முதலில் உளவு அமைப்புடன் உள்ள தொடர்பை மறுத்துள்ளார். பிறகு, ஆதாரங்களை வைத்து போலீசார் துருவித்துருவி விசாரணை செய்ததில், சத்யேந்திர சிவல் உண்மையை ஒப்புக் கொண்டார்.

போலீஸ்
போலீஸ்

தூதரகத்தில் பணியாற்றிய காலத்தில், இந்திய அதிகாரிகளிடம் லஞ்சம் கொடுத்து, பாகிஸ்தான் எல்லையில் உள்ள இந்திய ராணுவத்தின் நிலைகள், அதன் செயல்பாடுகள் குறித்த தகவல்களை பெற்று அவற்றை பாகிஸ்தானுக்கு கொடுத்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in