பரபரப்பு... வக்கீலை வலுக்கட்டாயமாக பாலுறவு சித்ரவதை...எஸ்.பி, இன்ஸ்பெக்டர் கைது!

பஞ்சாப் போலீஸ்
பஞ்சாப் போலீஸ்

வழக்கறிஞரை சக குற்றவாளியுடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாக 6 போலீஸார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் எஸ்.பி, இன்ஸ்பெக்டர் மற்றும் ஒரு போலீஸ்காரர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாப் போலீஸ்
பஞ்சாப் போலீஸ்

பஞ்சாப் மாநிலம், சண்டிகரில் செப்.14-ம் தேதி வழக்கறிஞர் கைது செய்யப்பட்டார். போலீஸாரை தாக்கியதாவும், அவர்களது சீருடைகளைச் சேதப்படுத்தியதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. இந்நிலையில், காவலில் இருந்த வழக்கறிஞர், சக குற்றவாளியுடன் பாலியல் உறவில் ஈடுபட உட்படுத்தப்பட்டார். அதை மறுத்த வழக்கறிஞரை போலீஸார் சித்ரவதை செய்துள்ளனர். இந்த பாலியல் விவகாரம் பஞ்சாப்பில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த குற்றச்சாட்டை விசாரிக்க லூதியானா காவல் ஆணையர் மந்தீப் சிங் சித்து தலைமையில் 4 பேர்கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் எஸ்ஐடி கூடுதல் போலீஸ் டைரக்டர் ஜெனரல்( உளவுத்துறை) ஜஸ்கரன் சிங்கின் கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22-ம் தேதி வழக்கறிஞரின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்ய முக்த்சர் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட் உத்தரவு பிறப்பித்தார்.

கைது
கைது

இதனைத் தொடர்ந்து இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 (இயற்கைக்கு மாறான பாலுறவு தொடர்பானது), பிரிவு 342 (தவறான சிறைவாசம் தொடர்பானது), மற்றும் பிரிவு 506 (குற்றவியல் மிரட்டல் தொடர்பானது) உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த நிலையில் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் பிரதிநிதிகள் சண்டிகரில் முதலமைச்சர் பகவந்த் மான்னை சந்தித்து மனு அளித்தனர். அத்துடன் சம்பந்தப்பட்ட காவல் துறையினரை பணிநீக்கம் செய்யக் கோரி பணிபுறக்கணிப்பு போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.

இதையடுத்து முக்த்சர் எஸ்.பி (விசாரணை) ரமன்தீப் சிங் புல்லர், இன்ஸ்பெக்டர் ராமன் குமார் கம்போஜ், போலீஸ்காரர்கள் ஹர்பன்ஸ் சிங், பூபிந்தர் சிங், குர்பிரீத் சிங் மற்றும் வீட்டுக் காவலர் தாரா சிங் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. எஸ்.பி புல்லர், இன்ஸ்பெக்டர் ராமன் குமார் காம்போஜ், போலீஸ்காரர் ஹர்பன் சிங் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in