தந்தையை வெட்டிப் படுகொலை செய்த ஆசிரியர்: குடும்பத் தகராறு காரணமாக வெறிச்செயல்!

கொலை செய்யப்பட்ட தசரதன்
கொலை செய்யப்பட்ட தசரதன்
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கடம்பூர் அக்ரஹாரம் தெருவைச் சேர்ந்தவர் தசரதன்( 52). இவரது மகன் அஸ்வத் குமார்(30). இவர் பசுவந்தனை அரசு மேல்நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

அஸ்வத் குமாருக்கு, அருணா என்ற பெண்ணுடன் திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகளும் உள்ளனர். 2வது பெண் குழந்தை பிறந்து 3 மாதமாகும் நிலையில், கணவன் - மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அருணா குழந்தைகளுடன் கயத்தாறு அருகே உள்ள தனது தாய் வீட்டிற்குச் சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், அஸ்வத் குமார் தன்னுடைய குழந்தைகளைப் பார்ப்பதற்காக கூட்டுப் பண்ணை கிராமத்துக்கு நேற்று சென்றுள்ளார். ஆனால், குழந்தைகளைக் கணவரிடம் காட்ட, அருணா மறுத்ததாக கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த அஸ்வத் குமார் நேற்று இரவு கடம்பூரில் உள்ள தனது தந்தை தசரதனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

இந்நிலையில், மீண்டும் இன்று காலை மனைவியைச் சந்திப்பதற்கு கிராமத்துக்குச் சென்று குழந்தைகளை பார்க்க முயற்சித்துள்ளார். அப்போது அங்கு தகராறு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த அஸ்வத் குமாரின் தந்தை தசரதன் கடம்பூரில் இருந்து புறப்பட்டு கூட்டுப்பண்ணை கிராமத்துக்கு சென்று மகனை அழைத்து வர முயற்சித்துள்ளார்.

அப்போது மனைவி மீது ஆத்திரத்தில் இருந்த அஸ்வத், தந்தை தசரதனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த அஸ்வத் குமார் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தந்தை தசரதனை சரமாரியாக வெட்டிப் படுகொலை செய்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த கயத்தாறு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தசரதன் சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தந்தையை வெட்டிக் கொலை செய்துவிட்டு தலைமறைவான மகன் அஸ்வத் குமாரை போலீஸார் தேடி வருகின்றனர்.

குடும்பத் தகராறு காரணமாக அரசு பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தனது தந்தையை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் கயத்தாறு பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

பயணிகள் அதிர்ச்சி! தீபாவளியையொட்டி... விமான கட்டணங்களிலும் கொள்ளை!

வைகை அணை திறப்பு… 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

ஐயப்பனுக்கு தங்க அங்கி..  சபரிமலையில் இன்று நடை திறப்பு!

ரூ.25,00,000 பரிசுத் தொகையை... தான் படித்த கல்லூரிகளுக்கு பிரித்துக் கொடுத்த வீரமுத்துவேல்... குவியும் பாராட்டுக்கள்!

செம ஹிட்டு... தீபாவளி கொண்டாட்டம்... 'ஜிகர்தண்டா2' படத்திற்கு முதல் ரிவியூ கொடுத்த பிரபலம்!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in